நெற்றிப் பொட்டிலிருந்து பின் மண்டைக்கு ஒரு அச்சும். இரு காதுகளையும் துளைக்கும் படியான அச்சும் குறுக்கிடும் இடத்தில் மூளையில் வேர்க்கடலை அளவுக்கு ஒரு சிறு உறுப்பு இருக்கிறது.நம் சித்தர்கள் மனோன்மணி என்று அழைப்பார்கள். அதை அறிவியலா ஆன்மிகமா என்று வேறுபடுத்த முடியாதபடி ஒருவிஞ்ஞானம் சித்தர்களிடையே இருந்துவருகிறது. அவர்கள் மொழியில் மனோன்மணி "சகஸ்ராரம்" எனப்படும். ஆயிரம் இதழ் தாமரை வடிவமுடைய ஒரு ஆதாரச்சக்கரம். சூட்சுமமான அந்த சக்கரத்தின் பருவடிவிலானஒரு நிகர் உறுப்பாகமனோன் மணியைக் கருதினர்.
அதை நெற்றிக் கண் அல்லது மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் கூறிவந்தனர்.சித்தர்களின் உண்மையில் மனோன்மணியானது பினியல் சுரப்பிதானா?சந்தேகம்தான் என்பது அரைகுறை'சித்தர்கள்' எழுத்தாளர்களாக மாறி அவரவர் விருப்பத்திற்கு உடலின் ஆதாரச் சக்கரங்களுக்கு நிகராக ஒரு மனித நாளமில்லாததை ஈடு செய்ய சிலர் சுரப்பிகளை ஆரம்பித்தனர்.மனோன்மணி என்பது பினியல் சுரப்பி என்றும் பிட்யூட்டரி சுரப்பி என்றும் வாதிடுவர். இந்தவாத பிரதிவாதங்களுக்கெல்லாம்
எரி ஊட்டுவதாக இருந்த இன்னொரு விஷயம், பினியல்சுரப்பியின் உண்மையான வேலை என்ன என்பதுசென்ற நூற்றாண்டுவரை தெரியாமல் இருந்ததுதான். இருபதாம் நூற்றாண்டில் பல ஆராய்ச்சிகள் நடந்தன.
குழப்பங்களுக்குப் பின் பினியல் சுரப்பி ஒரு சந்திப்பு நிலையம் என்பது தெரியவந்தது. நரம்பு மண்டலத்தையும் (குறிப்பாககண்பார்வை) நாளமில்லாசுரப்பிகளையும் இணைத்து வைக்கும் சந்திப்பு இடமாக இருக்கிறது. மாறிவரும்பருவங்களுக்கேற்பவும், இரவுகள்,அமாவாசை, பவுர்ணமி போன்ற மாற்றங்களையும் உடலுக்கு உணர்த்தச் செய்வதும் இதுதான்.சுறுக்கமாகச் சொல்வதானால் இது மனித உடலின் கடிகாரம்....காலங்காட்டி. மனித மூளையில் பினியல் சுரப்பி இருப்பது நம் முன்னோர்களுக்கு தெரிந்திருப்பது போல பழங்கால கிரேக்க உடல்கூறு அறிஞர்களுக்கும் தெரிந்திருந்தது.
இரண்டாம் நூற்றாண்டில்வாழ்ந்த கேலன் (Galen) மூளையில் திறந்து மூடுவதற்கேற்ப நினைவும் ஜோடி இல்லாமல் தனியாக இருக்கும் உறுப்பு. இது, செரிப்ரம் உள்ள இடைவெளிகளுக்கு திரவத்தின் மேலே உட்கார்ந்திருக்கும் பகுதியில் தனியாக இருக்கும் உறுப்பு என்று குறிப்பிடுகிறார்.அவர் மனோன்மணியை அவர்(கேலான்) மனதின் நினைவுப்பெட்டகம் என்றம் அதன் 'வால்வு' திறந்து மூடுவதற்கேற்ப நினைவுகளும், உறக்கமும் நிகழ்கிறது என்று சொன்னார்.
பிற்கால ஆய்வுகளில் இவர் சொன்னது 50% சரி என்பது தெரிந்தது. டெஸ்கார்த்தே (Rene'Descartes) என்ற 17 ஆம் நூற்றாண்டு கணித, உளவியல்,தத்துவ மேதை கண்கள் கவனித்தவை இரண்டு வடங்கள் மூலமாக பினியல் சுரப்பி வருகின்றன. அங்கே அவை தக்க கட்டளைகளாக மாற்றப்பட்டு உடலின் தசைகளுக்கு நாடிகள் மூலமாக அனுப்பப்படுகின்றன. அதன் மூலம் மனிதன் சூழலுக்குத்தக்கபடி இயங்குகிறான் என்றார். இவர் சொன்னதிலும் ஒரு பகுதிநிஜமாகவே இருக்கிறது. ஆட்டோ ஹியூப்னர். (OttoHeubner 1898) என்ற் மருத்துவர் ஒரு வினோதமான மருத்துவத் தகவலை வெளியிட்டார்.
ஆபூர்வமாக சிறுவர்கள் தீடீரென்று பெரிய ஆண்களைப் போல தாடி மீசை ஆகியவை வளர்ந்து முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். இதை 'துரிதவாலிபம்' என்பார்கள். (Precociouspuberty)
இச் சிறுவர்களின் பீனியல் சுரபியில் கட்டி வந்திருப்பதை ஹியூப்னர் அறிந்தார். அடுத்த 50 ஆண்டுகளில் இதை உறுதிப்படுத்தும் விதத்தில் நிறைய 'துரிதவாலிப்' பையன்களைப் பற்றி தகவல்கள் வந்தன. அனைத்திலும் பினியல் சுரப்பிலில் ஏற்பட்டிருப்பது கவனிக்கப்பட்டது. ஒரு சில தகவல்கள் பீனியல் சுரப்பியின் பிழையால் வாலிபம் அல்லது பெண்மை அடைவது காலம் தாழ்த்தப்படலாம் என்பது தெரியவந்தது.
ஏதோ ஒரு விதத்தில் பீனியல் சுரப்பி அண்டசய உறுப்புகளுடன் சம்மந்தப் பட்டிருப்பது தெரிந்தது. 'மூன்றாவது கண்' எனப்படும் பீனியல் சுரப்பி பற்றிய முக்கியமான திருப்பம் 1918 இல் நடந்தது 'நில்ஸ் ஹோம்கிரான்' என்பவர் தவளை, மீன், முதலான சிறு உயிரினங்களின் தலையில் பீனியல் சுரப்பி இருக்கவேண்டிய இடத்தில் என்ன ?என்ன ?இருக்கிறது என்று ஆராய்ந்தார். அவற்றின் மூளையை வெட்டிதிறந்து நுண்ணோக்கியில் பார்த்தபோது ஒரு ஒற்றுமை தெரிந்தது.
மூன்றாவது கண்
எல்லா விலங்குகளிலும் கண்களிலும் சொல்லி வைத்தாற் போல விழித்திரையில் காண ப்படும் ஒளியை உறிஞ்சும் கூம்பு செல்கள்போன்றவை இருந்தன. அவை நேரடியாக நரம்பு செல்களுடன் தொடர்பும் கொண்டிருந்தன. ஒருவேளை கண்போன்ற உறுப்பாக இருக்குமோ என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. நெற்றி வழியாக அது வெளி உலகத்தின் ஒளியை அறியும் நெற்றிக்கண்ணாக இருக்குமோ என்றுஅவர். நினைத்தார். அதை மூன்றாவது கண் (Third eye) என்று அழைத்தார். பெர்டோல்ட்ஹார்ட் என்பவர் இந்த உறுப்பின் மின்தூண்டலை ஆராய்ந்து உணர்ந்து பினிய உறுப்புகளுக்கு ஒளியை இது நரம்புத்துடிப்பாக மாற்றுகிறது என்பதை நிரூபித்தார்.
மெலட்டோனின்
'மெலட்டோனின்ஆரான் லெர்னர்' என்பவர் (ஏல்பல்கலை) 1958 இல் பீனியல் சுரப்பியில் மெலட்டோனின் (Me-latonin) என்கிற பொருள் காணப்படுவதை (ஆடு மாடுகளில்) அறிந்தார். மெலட்டோனின் மட்டுமல்லாமல் செரட்டோனின்
(Seratonin) என்று இன்னொரு பொருளும் பீனியல் உறுப்பில் இருக்கிறது என்பதும் பின்னர் தெரியவந்தது.தோற்றம் பீனியல் உறுப்பானது பாலூட்டிகளுக்கு (மனிதன்உட்பட) பீனியல் சுரப்பிகளில் ஒளியுணர் செல்கள் இல்லாததால் இதை மூன்றாவது கண் என்றுசொல்வதற்கு இயலாது.
தோற்றம்
நீருபித்துப் பார்க்கவேண்டி எலிகளை இரண்டு கூட்டமாகப்பிரித்து ஒளியில் படஒன்றை தொடர்ச்சியாக செயற்கைஒளியில் (இரவுபகல் இல்லாமல்)வளர்த்தனர். மற்றதை வழக்கமான இரவு வளர்த்தனர்.கருவளர்ச்சியின் போது மூளையின் ஒரு பகுதியாகத் தோன்றியபோதிலும் மூளை வளர்ந்து முடிந்தவுடன், பீனியல் உறுப்பானது மூளையின் சம்மந்தத்தை முற்றிலும் இழந்து தனி ஒரு உறுப்பாக மூளையில் அமர்ந்து கொள்கிறது.
மூளைநரம்புகள் இதனுடன் தொடர்பு கொள்ளாவிட்டாலும், கழுத்துப்பகுதியிலிருந்து பிரியும் நரம்பு சுழற்சி மண்டலத்திலிருந்து நரம்புகள் இதனுடன் நேரடியாக செல்லுக்கு (Cell) செல் தொடர்புகொள்கின்றன. தவளை, மீன் போன்ற எளிய முதுகெலும்பிகளில் பீனியல் உறுப்பகளில் ஒளி உணரும் கூம்புசெல்கள் இருப்பதை முன்பேசொல்லியிருக்கிறோம் பாலூட்டிகளின் பீனியல் உறுப்புகளில் அது போன்ற கூம்பு செல்கள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அவை பரிணாமகதியில் இழக்கப் பட்டவை என்று சொல்வதினால் மனித பீனியல் உறுப்பு தவளையின் பீனியல் உறுப்பின் எச்சம் என்று சொல்வதற்கில்லை. பரிணாமத்தில் புதிய வேலையை எடுத்துக்கொண்டு புதிய வடிவமடைந்த உறுப்பு என்று சொல்வதே தக்கது.சுழற்சியில்தொடர்ச்சியாக வளர்க்கப்பட்ட எலியின் பீனியல் உறுப்பு சிறுத்துப் போனதுடன்,மாதந்திர சினை உற்பத்தி செய்யும் வேகமானது பெரிதாகி துரிதமாகி விட்டன. அதாவது பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் மாதவிலக்கு சீக்கிரம் சீக்கிரமாக நிகழ்வதற்கு இது ஒப்பாகும்.
இரவுபகல் என்ற சாதாரண சூழலில் விடப்பட்ட எலிகளில் சினை சுழற்சி சீராக இருந்தது. பீனியல் உறுப்பும் இயல்பான அளவிலேயேஇருந்தது சுறுங்கவில்லை.பீனியல் உறுப்பு நேரடியாக வெளிச்சத்தைகவனிக்கும் உறுப்பாக (மூன்றாவதுகண்ணாக) இல்லாவிடினும் மறைமுகமான விதத்தில் அது தொடர்ந்து வெளிச்சத்தைஉணரக்கூடியதாகவே இருப்பது வியப்பாக இருக்கிறது.
பகல் ஒளி எப்படி மண்டை ஓட்டினைதாண்டி மூளைக்குள் புகுந்து பீனியல் உறுப்பை அடையமுடியும்? மாறாக கண் மூலம் பெறும் பகல் ஒளி தனி நரம்பு வழியாக 'செர்விக்கல் கேங்ளியான்' மூலம் 'சிம்பத்தட்டிக்' (பிரிவு நரம்பு) நரம்புகள் வழியாக பீனியல் உறுப்பிற்கு தகவல் தருவதாக உள்ளது.
எலிகளின் கண்களைக் கட்டிவிட்ட போதும், அவற்றின்பரிவு மண்டலத்தை துண்டித்து விட்ட போதும்போம் பீனியல் உறுப்பானது ஒளிக்கு இணங்குவது தடைசெய்யப்பட்டது தெரிந்தது. ஒருவிதத்தில் பீனியல் உறுப்பானது இரவுபகலை உணர்ந்து இயக்கங்களைஉடலின் பல குறிப்பாக இனப்பெருக்க நிகழ்ச்சியை தடையின்றி சீராக செயல்படஉதவுகிறது என்பது தெரிகிறது.பகலில் பீனியல் உறுப்பு 'செரமடடோனின்' என்ற நரம்புக்கடத்தி மூலக்கூறையும், இரவில் 'மேலட்டோனின்: என்ற நரம்புக்கடத்தியையும் உருவாக்குகிறது. மெலட்டோனின் அதன் தூக்கத்தை தூண்டிவிடுவதுடன் பெண்களில் சினை மற்றும் புணர் உறுப்பு ஆகியவற்றை கட்டூப்பாட்டில் வைக்கிறது.
நவீன நாகரிகம் காரணமாகபெண்கள் இப்போதெல்லாம்இரவில் வெளிச்சத்தில் வேலைபார்க்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்களது மாதந்திர நிகழ்ச்சிகளும் துரிதமாகி அவதிப்படுகிறார்கள்.மெலட்டோனின் உற்பத்திக்கு இருட்டு தேவைப்படுவதால் நம்மால் வெளிச்சத்தில் தூங்கமுடிவதில்லை. விலங்குகள் உலகின் இரவு பகல் காலகதிக்கும், பவுர்ணமி,அமாவாசை சுழற்சிக்கும் ஏற்ப உடலை சீர்படுத்திக் கொள்வதற்கு ஏற்றபடி பீனியல் உறுப்பானது ஒரு கடிகாரமாக செயல்படுகிறது.'
நாகரிக மக்களின் பலதரப்பட்டஉடல் - மனத் தொல்லைகளுக்கான காரணம் இரவுபகலாக உழைந்து (மனோண்மணி) பீனியல் உறுப்பினை தொந்தரவு செய்வதால்தான். நமது யோகிகள் பரிவு நரம்புமண்டலத்தை மனக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பீனியல் உறுப்பை தூண்டி, இயக்கத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு உள்ளொளியைக் காண வைக்கிறது என்பது ஒருவேளை உண்மை தானோ?.
0 கருத்துகள்