Hot Posts

6/recent/ticker-posts

மக்களும் விட்டமின் மாத்திரைகளும்

 மக்களும் விட்டமின் மாத்திரைகளும்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இருபக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு அதனை நேரந்தவறாமல் விழுங்கி வருவதை நாம் பார்க்கின்றோம். எனதுஎனது பிள்ளைமெலிந்து, ஆரோக்கியமற்று இருக்கின்றான்;ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக்எழுதித் தாருங்கள் என்பார்கள்.



மருத்துவரும் தனக்குப் பிடித்தமான கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார் இன்று இவ்வாறாகப் படித்தவர்களிலிருந்து பாமரர் வரை மயங்கிக்கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரையும் ஒன்று.

உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூடத் தங்களை மேலும்பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றஎண்ணத்தால் இதைச் சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளைச் சத்துமாத்திரைகள் என்று அறிந்து கொண்டமக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும்,இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.

இந்தச் சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக்கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் யாவை? என்பதை இனி நாம் பார்ப்போம்.ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில்படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும்முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை.

முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராகச் சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்கின்றன.இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்துவிடுகின்றது. நாக்கில் 9000க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன.

இவை நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்பட்ட சத்துக்களைச் சுவையின் அடிப்படையில் பிரித்துச் சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகின்றன. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது.

இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போதுதான் நடைபெறும்.உதாரணமாக பாகற்காயைச் சாப்பிடுகிறோம் அதன் கசப்புச் சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இந்தத் தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ, அதற்குத் தகவல் அனுப்புகிறது.

கசப்புச் சுவை தகவல் தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை,சிறுகுடல் ஆகியவையாகும்.எனவே இந்தத் தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன.பாகற்காயை நாம் மென்று சுவைத்துச் சாப்பிட்டால் அதன் சத்தை உடனடியாகஅவை கிரகித்துக் கொள்கின்றன.இது போன்றே இனிப்புச் சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும், உவர்ப்புச்சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும், புளிப்புச்சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும், துவர்ப்புச்சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகின்றன.

மேற்குறிப்பிட்டஉறுப்புகளின் கீழ்ச் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் நாம் நினைவில்வைத்துக் கொள்ள வேண்டும்.இனிப்புச் சுவை வயிற்றுக்குச் சக்தியளிக்கும் என்பதால், இனிப்பைத் தின்பதோ, உப்புச் சுவை சிறுநீரகத்திற்குச் சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத்தின்பதோ, சரியான அணுகுமுறையன்று.சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொருஉணவுப் பொருளிலும் பல வகைச் சுவைகளும் கலந்து இருக்கின்றன.

ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்புச் சுவைதெரியும். பிறகு சிறிது உவர்ப்புச் சுவைதெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்றும் இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகைச் சுவைகள் கலந்து இருக்கின்றன. சில உணவுப்பொருட்களில் சிலவகைச் சுவைகள் அதிகமாக இருக்கும். உதாரணமாகப் பாகற்காயில் கசப்புச் சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்புச் சுவையும் இருக்கும்.நாம் உணவை நன்றாக நிதானமாகச் சுவைத்துச் சாப்பிடும் போதுதான், நாக்கால்

விரைவாக உணர்வு சுவை உணரப்பட்டு, மூளைக்குத் தகவல் அனுப்பப்பட்டு அந்தச் சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்குச் சமிக்ஞை அனுப்பப்பட்டு அவை அந்தச் சத்தைப் பெறுகின்றன.அப்படியில்லாமல் சாப்பிடும்போது, நாக்கின்மொட்டுக்களில் முழுமையாக அந்த சுவை உணவுபடுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை.

இதனால் நாக்கால் சுவைகளைத் தெளிவாகப்பிரித்து மூளைக்குத் தகவல் தெரிவிக்க சரியான கட்டளைகள் அஅனுப்ப முடிவதில்லை.(சமிக்ஞை) கிடைக்காத காரணத்தினால் அந்தஉணவில் ஏன் சோற்று மூட்டைகளைக் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும்? இந்தச் சோற்று மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த,எளிதில் கொண்டு எடுத்துச் செல்லக்கூடிய இந்தச் சத்து மாத்திரைகளைச் சிரமமின்றிக் கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?

விட்டமின் மாத்திரைகளால் மார்பகப்புற்றுநோய் வரும் என்பதற்கான ஆராய்ச்சிமுடிவினை டாக்டர் காட் அர்னி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த மாத்திரைகள் எவ்வளவுதான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதிகச் சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா? விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வைநிலத்தில் சிந்தப் பாடுபட்டுபொருட்களை விளைவிக்கதேவையில்லையே!

#Realize

#Tamil-Thalir


கருத்துரையிடுக

0 கருத்துகள்