Hot Posts

6/recent/ticker-posts

உயிரிகளின் அற்புதங்கள்

  உயிரின உடம்புகளின் அற்புதங்களை என்னவென்பது? கண், காது, மூக்கு முதலான புலன்களின் காரியங்களும் கை, கால் முதலான அங்கங்களின் இணையற்ற அழகையும் சொல்லால் விளக்க முடியாதன. சின்னஞ்சிறு எறும்பு முதல் மனிதன் வரையிலான உடம்புகளில் எண்ணிறந்த உருவ வேறுபாடுகள் இருக்கலாம்.எனினும் அவற்றை உருவாக்கித்தரும் ஜீன்களில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதுதான் இங்கே நாம காண இருப்பது.



பரிணாம இயலின் தந்தை எனப்புகழப்படும் சார்லஸ் டார்வின் கொஞ்சம் பயந்த சுபாவமுடையர் போலிருக்கிறது. பரிணாமம் என்ற ஒரே தத்துவத்தில் உலக உயிரிகளின் அதிசய வடிவ குணாதிசயங்களை எல்லாம் அவரால் எளிதில் விளக்க முடிந்தபோதிலும்... மனிதக்கண்களின் அமைப்பின் நுணுக்கம் அவருக்கு பயத்தையே தந்தன. 'இன்றும்கூட கண்களைப்பற்றி நினைத்தலே எனக்கு குளிர்நடுக்கம் ஏற்படுகிறது' என்று 1860 இல் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் டார்வின் குறிப்பிடுகிறார்.


'இயற்கைத் தேர்வு' மூலம் மட்டுமே தானாக அற்புதமான மனிதக்கண்கள் தோன்றியிருக்க முடியுமா? என்பதை டார்வினாலேயே நம்ப முடியவில்லை. டார்வின் தேவையில்லாமல் பயந்திருக்கிறார். அவர் கண்டுபிடித்த தத்துவத்தை அவரே அறிந்து பயந்து நடுங்கும்படி அத்தத்துவம் இருந்தது என்னவோ உண்மைதான். பயாலஜி அறிஞர்கள் நிறைய பேர்களுக்கு இந்த பயம் எப்போதுமே உண்டு...என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். நவீன பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் மற்றும் மூலக்கூறு உயிரியல் வல்லுநர்களால், உயிரினங்களில் காணப்படும் சிக்கலான அமைப்புகள் அனைத்தும் எப்படி ஜீன் கட்டுப்பாட்டின் மூலம் உருவாகின்றன என்பதைக் கண்டுபிடித்தபடி உள்ளனர்.


கண்கள்,சிறகுகள், பூக்கள், கைகால் ஆகியஉறுப்புகள் எப்படி முளைக்கின்றன அவற்றின் அடிப்படை ஜீன்கள் எவை எவை என்பதைக் கண்டுபிடித்தபடி உள்ளனர். இதில்அதிசயம் என்னவெனில் உருவவேற்றுமகள் யாவும் எளிமையான சின்ன ஜீன் மாற்றங்கள் மூலம் மிகச்சுலபமாக பரிணமித்துவிடுகின்றன என்பதே! "ஏதோ ஒரு வினோதமான முறையில் எல்லாவித அதிசய உடலுறுப்புகளும் பரிணமித்து இருக்கின்றன அவை நேர்த்தி யாகவும், அழகாகவும்- எளிமையாகவும் இருந்து விடுகின்றன" என அறிவியலாலர் ஹோவர்ட் பெர்க்(Howard Berg) என்பவர் கூறுகிறார். நாற்பது ஆண்டுகளாக பேக்டிரியாக்களின் உறுப்பாகிய கசையிழைகளைப் பற்றி ஆராய்ந்தவர்  இவர்.


ஒரு குண்டூசியின் முனையில் ஓராயிரம் பேக்டிரியாக்கள் உட்கார முடியும் என்றால் அதன் உருவத்தை பற்றி யோசித்துப் பாருங்கள். பேக்டீரியாவின் ஒரு முனையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மீசை போன்ற ஒற்றை சாட்டை இழை எவ்வளவு மெலிதாக இருக்கும் என்பதையும் சற்று எண்ணிப்பாருங்கள். அந்த சாட்டை இழை வினாடிக்கு 300 முறை சுழலவைக்க உதவும் அதன் மோட்டார் உறுப்பு எவ்வளவு சிறிதாக இருக்கும் என்பதையும் சற்றுகொஞ்சம் நினைத்துப் பாருங்கள்

மோட்டாருக்கும் உள் உறுப்புகள் உண்டு, எந்தவித மின்சாதனமோ,கம்பிச் சுற்றுகளோ இல்லாமல் அது எப்படி சுழலுகிறது? பரிணாமம் அதை எப்படி உற்பத்தி செய்திருக்கக்கூடும்? இதில் அனுபவசாலியான ஹோவர்டு அவர்களே என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா? 'ஐடியா ரொம்ப சிம்பிள்தான் பேக்டீரியா எதையாவது செய்து தன் ஜீன்களில் சில மாற்றங்களை செய்துகொண்டே இருக்கும். 


"மாற்றத்தால் ஏதாவது பயனிருக்கிறதா?" என்று பார்க்கவேண்டும். பயனில்லை என்றால் அந்த பேக்டீரியா அழிந்து போகும்..பயனிருந்தால் இயற்கையால் சேகரிக்கப்படும்... மேலும்  மேலும் மேலும் ஜீன் மாற்றங்கள்... இயற்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பரிட்சையின் முடிவில் ...பயனுள்ள ஜீன்களின் தேர்வுந்தெடுக்கப்படும். அந்த ஜீன்களின் சேகரிப்பு மேலும்.. மேலும் மாற்றங்கள் இப்படித்தான் இயற்கையில் புது புது  உருவங்களும் உறுப்புகளும் தோன்றுகின்றன. 

டார்வின் 150 ஆண்டுகளுக்கு முன்பே 'ஆரிஜின் ஆஃப்ஸ்பீஸிஸ்' என்ற நூல் மூலம் அற்புத உறுப்புகளின் தோற்ற இரகசியங்களை செம்மையாகவே விளக்கியிருந்தபோதிலும்,

இப்போதும் கூட உயிரினங்களில் காணப்படும் வினோத அமைப்புகளையும், அவற்றின் ஒருங்கிணைந்த இயக்கங்களையும் வெறும் குருட்டுத்தனமான இயற்கை தேர்வு மட்டுமே செய்து தந்திருக்குமோ? என்று சந்தேகப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

'கிரியேஷனிஸ்ட் என்போர் 'பரிணாமக் கொள்கைகளுக்கு எதிர் கருத்துடையவர்கள், கிரியேஷனிஸ்ட்டுகள் (Creation-ist) 'இறைவனின் படைப்பு' கொள்கையினர்.


நுண்ணிய பேக்டிரியம், அதன் நுணுக்கமான கசையிழை மோட்டார் போன்ற அற்புதமான அமைப்புகளை இறைவனது சர்வ வல்லமை பொருந்திய அறிவாற்றலினாலன்றி வெறும் ஜட இயக்கத்தாலும் குறிக் கோளற்ற இயற்கைத்தேர்வினாலும் நிகழ்ந்திருக்கமுடியாது என்பது அவர்களுடைய தீர்ப்பு. கடவுளே சகல உயிரினங்களையும் தன் சொந்த முயற்சியால் செய்து வைத்தார் அல்லது படைத்தார்  என்பது அவர்கள் முடிவு .


ஏராளமான உயிரியல் அறிஞர்கள் பரிணாமத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பரிணாமத்தின் மூலம் எப்படி உறுப்புகள் தோன்றுகின்றன என்பதை ஆராய்வதே மிகவும் உற்சாகமான ஆராயச்சி என்பது அவர்கள் கருத்து. இன்று பல்லாயிரக்கணக்கான சாட்சியங்கள் அறிவியல் களங்சியங்களில் சேர்ந்தபடி உள்ளன. 


உயிரினங்களில் காணப்படும் அமைப்புகள் ஓரிரு நாட்களிலோ அல்லது ஆண்டுகளிலோ ஏற்பட்டவை அல்ல. அவை பலநூறு மில்லியன் ஆண்டுகளில் சிறுகச் சிறுக மாறுதலடைந்து தோன்றியவை. உயிரினங்களின் ஜீன்களை ஒப்பிட்டு ஆய்வதன் மூலம் மாற்றங்கள் எப்படி ஜீன்களில் தோன்றின என்பதை அறிய முடிகிறது. 


எப்பேர்பட்ட சிக்கலான சிக்கலான உறுப்பாக இருந்தாலும் சரி அதன் ஆரம்ப கட்டமைப்பு அதன் துவக்க அமைப்பு மிகவும் எளிமையாக இருப்பதை இன்றும் பார்க்கமுடிகிறது.  

நடுவில் ஏற்பட்ட சின்னச் சின்ன மாற்றங்களும் தெளிவாகவே தெரிகின்றன.


பரிணாமத்தின் அடிப்படை நடைமுறைகள் இப்போது தெளிவாக விளக்கியுள்ளன. நுணுக்கமான, சிறு சிறு மாற்றங்கள் பல மில்லியன் ஆண்டுகளாக நிதானமாக செதுக்கப்படுவதால் ஏற்பட்டஏற்பட்டசின்னச் சின்ன மாற்றங்களும் தெளிவாகவே தெரிகின்றன. எப்பேர்ப்பட்ட சிக்கலான அமைப்பும் கூட தோன்றக்கூடும்


பழைய ஜீன்களை கொஞ்சம் மாற்றி புதிய வடிவம் ஏற்படுத்துவதும்- மாற்றம் ஏதும் செய்யாம வேறு ஒரு வேலைக்கு அதே ஜீன்களைப் பயன்படுத்திக் கொன்வதும் சர்வ சகஜமாக நிகழ்கிறது இயற்கை நிஜமாகவே சிக்கனமான சிற்பி அதிலும் மிகவும் பொறுமைமிகுந்த சிற்பி. 


சீயன் -கேர்ரல் (Sean Carrel. Uni.versity of Wisconsin. Madison)என்பவர் தாய் வயிற்றில் வளரும் கருவில் உறுப்புகள் எப்படி தோன்றி வளருகின்றன, ஜீன்கள் அதற்கு உறுதுணையாக எங்ஙனம் மேற்பார்வையிடுகின்றன என்பதை கீழ்கண்டவாறு விளக்குகிறார்.


தினமும் மாலை 6 மணிக்குப் பிறகு மேல் கட்டடம் கட்டுமிடதுதிற்குச் சென்று பார்த்தீர்களானால், தினந்தினம் கட்டிடம் வளர்ந்திருப்பது பார்க்க அதிசயமாகத் தெரியும். அது தானாகவே எழும்பிவிட்டாற் போலக் கூடதெரியும்.ஆனால் பகலில் அங்கு சென்று பார்த்தால்....நூற்றுக்கணக்கான ஆட்கள் சிறுகச் சிறுக செங்கல் செங்கல்லாக கட்டிடத்தை எழுப்புவது தெரியும்...


அது மட்டுமா அதே ஆட்கள் முற்றிலும் வேறு விதமான கட்டிடத்தை கட்டுவார்கள் என்று தெரியும். ஒரே

விதமான உடல்கட்டுமான ஜீன்கள் செல்களும், அற்புதமாக... எல்லா உயிரினங்களிலும் செயல்படுகின்றன கை, இறக்கை, துடுப்பு என எந்த உறுப்பாகஇருந்தாலும் கட்டுபவர்கள் ஒரே வகையான ஜீன்கள்தான்.


மனித உடம்பில் பத்து டிரில்லியன்செல்கள் உள்ளன. தான் யார்என்றே அறியாத, அறிவற்ற அற்புதமாக ஒன்றிணைந்துவேலை செய்து

 ஒரு”.... முழு உடம்பாக உருவெடுக்கின்றன.“இது ஒரு அதிசயமான நடனம்”என்கிறார் நிக்கோல் கிங் (Univer-sity of California) என்பவர். இந்த நிகழச்சியில் செல்கள் பெயர்ந்து தமக்கென்று உரிய


இடத்தை அடைய வேண்டும், தமக்கு விதித்த பணியை மறவாமல் மேற்கொள்ள வேண்டும். 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிக்கல் நடனத்திற்கான அஸ்திவாரம் ஆரம்பமாகிவிட்டது. ஒரே ஒரு செல்லையே தன்  உடம்பாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஜீவராசிகள், படிப்படியாக பல செல்களை ஒன்றாகக்கட்டி உடம்பாகஆக்கிக் கொண்ட போதே- உடல்கட்டுமான ஜீன்கள் தோன்றிவிட்டன... அக்காலம் முதற்கொண்டு தனி வாழ்க்கையை விடுத்து செல்கள் சமுதாய வாழ்க்கையை மேற்கொள்ளத் துவங்கின.


நிக்கோல் கிங் என்பவர் ஒரு பெண்மணி. இவர் ஒற்றை செல் ஜீவராசிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்பவர்,கேனோஃபிளாஜெல்லேட்(Choano flagellate) என்பவை ஒருசெல் ஜீவராசி. இதை நீங்கள் ஆசைப்பட்டால் உங்களுக்கு மைக்ராஸ்கோப்பு வேண்டும்


 



வேண்டும். அந்தத் துளி நீர் பெருங்கடலாகவும் நூற்றுக்கணக்கான சிறு ஜீவன்கள் நீந்தித் திளைத்துக் கொண்டிருப்பதையும் அவற்றில் ஒரு பகுதியாவது 'கேனோஃபிளாஜெல்லேட்'டாக நிச்சயமிருக்கும்.மற்ற புரோட்டேஸோவா அதில் மாதிரி இல்லாமல் இவை தனிப்பட்ட கழுத்துப்பட்டையும், நீண்ட கசையிழையையும் பெற்றிருக்கின்றன.


கிங் இவற்றை ஆராய்ந்தபோது ஒரு சில புரதங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. அவை வழக்கமாக பல செல் உடல் கொண்ட ஜீவராசிகளில்தான் காணப்படுபவை."இங்கே இவற்றிற்கென்ன வேலை" என்று அவர் ஆச்சரியப் பட்டார். இத்தகைய புரதங்கள் கூட்டு செல் உயிரிகளிடம்தான் வழக்கமாககாணப்படும். ஒட்டுப்பிசின் போல்இரண்டு செல்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ள உதவும். எதை வேண்டுமானலும் ஒட்டும் பிசின்கள் அல்ல, தன் இனத்தைச் சேர்ந்த செல்களிடையே மட்டுமே ஒட்டி வேறு செல்களை உதாசினம் செய்துவிடக்கூடிய புரதம் சார்ந்த பிசின்கள்.


வேறு செல்களுக்கு வேறு வகை பிசின் புரதம் உண்டு!கேனோஃபிளாஜெல்லேட்டுகள் எப்போதும் தனியன்களே...இவற்றிடம் ஏன் பிசின் புரதங்கள் உள்ளன எனில், நீரில் சுற்றித் திரிந்து கொண்டுள்ள பேக்டிரியாபோன்ற கிருமிகள் வந்து ஒட்டிக்கொள்ள இவை பயன்படுகின்றன. எண்ணெய் தடவிய காகிதத்தில் ஈக்கள் ஒட்டிக் கொள்வது போல பேக்டிரியாக்கள் இதன் மீது• ஒட்டிக் கொள்வதற்காக வேண்டி இந்தப் புரதங்கள் உதவுகின்றன.


பிற்காலத்தில், பரிணாமத்தில் தோன்றிய கூட்டுச் செல் உயிரிகள் இதே புரதத்தை தத்தமது செல்களை அடையாளம் கண்டு ஒட்டிக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டன. எனவே ஒரே ஜீன் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு காரியங்களை செய்வது தெரிகிறது. ஒரு காலத்தில் ஒன்றிற்காகப் பயன்பட்ட புரதம் இன்னொரு காலத்தில் வேறொன்றுக்காக உபயோகமாகிறது.


பரிணாமம் ஒருமுறை கண்டுபிடித்த கருவிகளை வீணாக்குவதில்லை!ஈக்களின் லார்வாக்களைப் பார்த்திருப்பீர்கள், பார்ப்பதற்கு வெள்ளையாக அரிசி அளவுக்கு இருக்கும், அது மொழுக்கென்று இருந்தாலும் ஏற்கனவே அதன் மீது தலை முதல் வால் வரையிலான பகுதிகளின் வரைபடம் வரையப்பட்டுவிட்டது.


அடுத்ததாக பலவித ஜீன் குழுமங்கள் அங்கங்கே செயல்பட்டு லார்வாவை அடுத்தடுத்த அறைகளாக வரையறுக்கின்றன. அதன் பின்னர் அருவிபோல வேறு பல ஜீன்கள் வரிசையாகத் தூண்டப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் ஆன்டென்னா, கால்கள், சிறகுகள் ஆகிய உறுப்புகள் முளைக்கின்றன. கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருந்த அனாட்டமி இப்போது கண்களுக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது.


ஈயின் லார்வாவில் வரைபடம் போடும் ஜீன்கள் ஈக்களுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. இதற்கு நிகரான ஜீன்கள் எல்லா மிருகங்களிலுமிருக்கின்றன, இருந்து இதே வேலையைச் செய்து தருகின்றன. மண்புழு முதல், நண்டு, மனிதன் வரை இதே வரைபட ஜீன்களே காணப்படுகின்றன. பார்ப்பதற்கு மிருகங்கள் யாவும் வெவ்வேறு தினுசாக இருந்தாலும் அடிப்படையில் அவை ஒரே மாதிரியான கட்டுமான முறைகளையே பின்பற்றுகின்றன என்பதை நினைத்துப் பார்க்கையில் அதிசயமாகவே உள்ளது.


இதற்குக் காரணமில்லாமலில்லை. 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கூட்டு செல் உயிரிதான் இந்த கட்டுமான ஜீன் செட்டு களை உருவாக்கின. அவற்றிலிருந்து மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் பரவியிருக்கிறது. தாத்தாவின் அத்தனை குணமும் பேரனிடம் இருக்கிறது என்று பெருமைபட்டுக் கொள்கிறோமில்லையா...அதுபோல் என்றோ வாழ்ந்து மறைந்த புழுவின் குணங்களும் நம்மிடம் இருக்கின்றன என்றும் சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டும்


Real Tips







கருத்துரையிடுக

0 கருத்துகள்