கடலைக் காக்கும் அட்டைகள் உ லகில் வாழும் ஒவ்வோர் உயிரும் மற்ற உயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏதோ ஒரு வகை யில் உதவுகின்றன. அந்த வகையில் கடல் சூழலில் மிகவும் இன்றியமை யாதவை பவளப் பாறைகள். பல உயிர்களுக்கு இவை உணவையும், உறைவிடத்தையும் தருகின்றன. சமீபத் தில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புவிவெப்ப மயமாதலால் கடல் வெப்பம் அதிகரிப்பது இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் இதற்கு மேலும் ஒரு காரணி இருப்பதைக் கண்டறிந்துள் ளன.கடந்த சில ஆண்டுகளாகப் பவளப் பாறைகள் சில வகையான பாக்டீரியா வின் தாக்குதலுக்கு உட்படுகின்றன. இவை இயற்கையாகக் கடலில் வாழும் பாக்டீரியா தான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் தான் இவற்றின் எண் ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிக ரித்துள்ளன. கடலின் அடியாழத் தரை யில் வாழும் இவற்றைப் பொதுவாகக் கடல் அட்டைகள் உட்கொண்டுவிடும். சில ஆண்டுகளாக ஆசிய நாடுகளில் கடல் அட்டைகள் மிக அதிக அளவில் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவது தான் பவளப்பாறைகள் அழியக் காரணம் என கருதினார்கள்.
தங்கள் கருத்தை ஆய்வுப்பூர்வமாக நிறுவுவதற்காக, விஞ்ஞானிகள் ஒரே வகை பவளப் பாறைகளை வெவ்வேறு இடங்களில் வளர்த்தனர். ஓரிடத்தில் கடல் அட்டைகளை வைத்தனர், மற்றோர் இடத்தில் கடல் அட்டைகள் இல்லை. 45 நாட்கள் தொடர்ந்து கண் காணித்ததில் கடல் அட்டைகள் இருந்த இடத்தில் வளர்ந்த பவளப் பாறை களில் எந்த நோயும் இல்லை, அவை ஆரோக்கியமாக இருந்தன. அட்டைகள் இல்லாத இடத்தில் வளர்ந்த பவளப் பாறைகளில் கடுமையான நோய் பாதிப் புகள் காணப்பட்டன, இந்த ஆய்வு வாயிலாக கடலின் ஆரோக்கியத்தைக் காக்கக் கடல் அட் டைகள் அவசியம் என்ற உண்மை நிறுவப்பட்டுள்ளது. உணவுக்காக அதிக அளவில் கடல் அட்டைகளைப் பிடிப் பதை விட்டுவிட்டு அதற்குப் பதிலாக இறால், மீன்களை வளர்ப்பது போல் கடல் அட்டைகளை வளர்ப்பது சிறந்த தீர்வு என்று விஞ்ஞானிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
0 கருத்துகள்