புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருப்பவை பசுமை இல்லவாயுக்கள். அவற்றில் முக்கியமானது கரியமில வாயு. சுற்றுச்சூழலில்உள்ள, அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை நீக்கச் சில செயற்கைமுறைகள் உள்ளன என்றாலும்,இயற்கையாகவே சில வழிகளில்வாயு நீக்கப்படுகிறது.
குறிப்பிட்டஅளவு கரியமில வாயுவை மரங்களும், கடலும் உறிஞ்சிக்கொள்கின்றன.இதைத் தவிர சாதாரணமாகவேபாறைகள், கற்கள் சிதையும்போதுஅவை கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றன. இந்த இயற்கைநிகழ்வை மனிதர்கள் தங்களுக்குச்சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு.
சிதைந்த கற்களை விவசாய நிலங்களில் தூவுவதால், பசுமை இல்லாவாயுக்கள் உறிஞ்சிக் கொள்ளப்படுவதுடன் பயிர்களின் விளைச்சலும்அதிகரிப்பதாக ஷெஃபீல்ட் லெவர்ஹுல்ம் பல்கலை கண்டறிந்துள்ளது.
பொதுவாகவே கற்களின் மேற்பரப்பு தான் கரியமில வாயுவைஉறிஞ்சிக் கொள்கிறது. அதனால்,ஒரு பெரிய கல் பல சிறு துண்டுகளாகும்போது பரப்பளவு அதிகரிக்கிறது,அதிகமான வாயுவை பெற்றுக்கொள்ளவும் செய்கிறது.2020ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே செயற்கையாகக்கற்களை உடைத்துப் போடுவதன்மூலம், ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழலில் உள்ள 200 கோடி டன் கரியமில வாயுவை நீக்க முடியும் என்றுகண்டறியப்பட்டுவிட்டது.
இது சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் போக்குவரத்து மூலம் உற்பத்தி ஆகும் கரியமிலவாயுவின் அளவை விட அதிகம்.சரி, இவ்வாறு உடைத்துப் போடுவதை வேறு எங்காவது செய்யலாமே, வயலில் ஏன் செய்ய வேண்டும்? சிதைந்த கற்களில்ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.பயிர்களுக்குத் தேவையானபல நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன. இவை தான் பயிர்களின்விளைச்சலை அதிகரிக்கின்றன.இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுவேண்டும் என்பதற்காகத் தான் விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்தனர்.
சோளமும், சோயாவும் பயிர்சுழற்சி முறையில் பயிரிடப்படும்விவசாய நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். எரிமலைப் பாறைகளிலிருந்துஉருவாகும் 'பசால்ட்' கற்துகள்களைஒரு ஹெக்டேருக்கு 50 டன் என்றஅளவில் நிலத்தில் சேர்த்தனர். ஆண்டின் இறுதியில் நிலத்தின் மொத்தவிளைச்சல் 16 சதவீதம் அதிகரித்தது.'பசால்டி'ல் பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து ஆகியவைஇருந்ததே இந்த அமோகவிளைச்சலுக்குக் காரணம்.
இங்கு விளைந்த பயிர்களும்ஊட்டச்சத்து மிகுந்து இருப்பதால்,இவற்றை உண்ணும் மனிதர்கள்,கால்நடைகளும் ஆற்றல் பெறுவர்.ஒரு ஹெக்டேருக்கு பரப்பப்பட்ட'பசால்ட்' துகள்கள் ஓராண்டிற்கு 4டன் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டால் ஒரே நேரத்தில் பயிர்வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு,புவி வெப்பமயமாதலையும்தடுக்கலா
0 கருத்துகள்