பேரண்டத்தின் தோற்றம்
The Euopean Organaisation for neucliar Research
ஒன்று இல்லா பாழ் வெளியில் 13,5 பில்லியன் ஆண்டகளுக்கு முன் பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன் அங்கு எதுவும் இருக்கவில்லை. இது விஞ்ஞான உண்மை, அப்படி இருந்த போது பேரண்டங்கள் பிரமாண்ட பொருள் நிறை (எடை) எப்படி , எங்கிருந்து பெற்றது என்பது ஒரு புரியாத புதிர்,
கடவுள் துகள்
முதலில் தோற்றம் என்பது ஒரு ஓங்காரா சப்தம் அதன் பின் ஒன்றுமே இல்லாதிருந்த வெட்டவெளியில் ஒரு துணுக்கு தோன்றி ஒரு பெரு வெடிப்பு. அதன்பின்பு அவை விரியதொடங்கி அணுக்கள் தோன்றி அவை திரண்டு பிரபஞ்சம் உருவாகியது. சரி அப்படியெனில் எடையற்ற துகள்களுக்கு எடை எப்படி வந்ததது எடை வந்தால்தானே தோற்றங்கள் முழுமை பெறும்...? வெறும் வெளிச்சமும், புகையும் அங்கு வெளிப்பட்டது என்றால் எப்படி. நிறையுள்ள பிரபஞ்சங்கள் உருவாகியிருக்ககூடும்..? அப்போது தோன்றியிருந்த அணுக்களுக்கு முதலில் நிறை இல்லாமல்தான் தோன்றியது. அவற்றிற்கு நிறை எப்படி வந்தது..?
இந்த கேள்வி “ஹிக்ஸ்” மற்றும் “பீட்டர்” என்ற விஞ்ஞானிகளுக்கு 1964ல் வந்தது எவ்வளவு ஆராய்ச்சி செய்தும் அவர்களால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை, ஆனால் ஒன்றுமட்டும் தெரிந்தது சந்தேகப்படும்படியான ஏதோ ஒன்று உள்ளே இருக்கின்றது.
அவருக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து இந்தியாவைச் சேர்ந்த “சத்தியேந்திரபோஸ்” என்ற விஞ்ஞானி 1984ல் அதை கண்டுபிடித்தார் உலகம் அதற்கு “ஹிக்ஸ்போசான்” என பெயரிட்டது. அவற்றை நாம் புரிந்துகொள்வதற்கு முன் அணுவிற்குள் ஒரு விசிட் அடித்துவிட்டு வந்துவிடுவோம்.
அணுவின் மையத்தில் புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்கள் இருக்கிறது. அதைச்சுற்றி எலக்ட்ரான் மேகத்திரள் போல் அதை சுற்றி வருகிறது. நடுவில் இருக்கும் அனுக்கரு மேலும் பல உபதுகள்களால் ஆனது. இயற்பியல் இவற்றை 12 துகள்களாகவும் 4 விசைகளாகவும் அடையாளப்படுத்தி வைத்துள்ளது. நான்கு விசைகளை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அவை டபிள்யூ போசான் ( W Boson) இசெட் போசான் (Z Boson) எனப்பட்டது.
இங்குதான் ஹிக்ஸ்போசான் கோட்பாடு முன் வைக்கப்படுகிறது. இது ஒரு தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இது ஒரு ஊட்டம் நிறைந்ததளம். இதற்குள் நுழையும் துகள்கள் அந்த தளத்தில் வினைபுரிந்து அது வினைபுரியும் அதிர்வுக்கேற்ப ஒரு நிறையை பெறுகிறது. ஒரு துகள் அங்கே எந்த அளவிற்கு வேகமாக அதிர்கிறதோ அந்தளவிற்கு அது நிறையை பெறும்.
அழுத பிள்ளைக்குத்தான் பால் என்பது போல. சில துகள்கள் இந்த தளத்தில் நுழையும்போது அதனுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளாமல் கடந்து செல்கிறது. நீ என்ன தருவது..? நான் என்ன பெறுவது..? என்ற ரீதியில். ஒளிமத்துகளான போட்டான்கள் (Poton) அப்படிப்பட்டவை. அது எந்த நிறையையும் ஏற்பதில்லை. ஒருவேளை அவை அங்கு ஒரு எடையை பெறுமானால் என்ன நடக்கும்.
ஒரு டார்ச் லைட்டை ஒரு சுவரை நோக்கி போட்டீர்களானால் சுவிட்ச் போட்டு சில விநாடிகள் கழித்துதான் சுவரின் மீது வெளிச்சம் தெரியும். "முதுகில் எடையை ஏற்றிக்கொண்டு எங்கே வேகமாக ஓட'' என்று கேட்பதுமாதிரி இருக்கும்.
இந்த கோட்பாட்டை அறிவியில் ரீதியாகவும் கணக்கியல் ரீதியாகவும் நிரூபித்த பின்பும் இதை பற்றி சாட்சிபூர்வமான நிருபணம் தேடி CERN ல் 100 உலக நாடுகளின் பங்களிப்பில் சுமார் பத்தாயிரம் விஞ்ஞானிகள் 1550 கோடி டாலர் மதிப்பில் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு இதை கண்டுபிடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் அடுத்த கட்ட ஆய்விற்கு நகரவில்லை காரணம் எல்லையற்ற பணம் மேல் ஆராய்சிக்கு தேவைப்படும். பிரபஞ்சத்தில் எப்படி இருந்ததோ அப்படி செயற்கையாக ஒரு சூழலை உருவாக்கி அந்த இடத்தில் இரண்டு ப்ரோட்டான்களை அதிவேகத்தில் மோதவிட்டு அது போசான் தளத்தில் எப்படி நிறையை பெறுகிறது என கண்டுபிடிக்க CERN முயன்று வருகிறது.
அன்புடன்
சந்திர ஆதித்யன்
0 கருத்துகள்