Hot Posts

6/recent/ticker-posts

வீட்டில் எப்போதும் செல்வமும் மகிழ்ச்சியும் நிலவ

          

                                            லட்சுமி கடாட்சம்

  நமது பண்டைய பாரதத்தினுடன் இரண்டறக் கலந்தது தீப வழிபாடு, காலை மாலை 4,30  முதல் 6,00 மணிகளுக்கு உள்ள நேரம்,  தீப சக்தி வழிபாட்டிற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது.  ஒருவரின் கிரக அமைப்பு எப்படி இருந்தாலும் மேற்கண்ட நேரங்களில் வீட்டில் தீபங்களை ஏற்றுவது கிரக பாதிப்புகளை வெகுவாக குறைப்பது மட்டுமின்றி லட்சுமி கடாட்சத்தை வீட்டில் துலங்க வைக்கும் சக்தி கொண்டது. முப்பது , நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில் விளக்கேற்றுவதற்கு  வசதியாக வாயில்கள்,  முற்றங்களில் விளக்கு ஏற்றி வைக்க பிறை மாடங்கள் வைத்து கட்டும் பழக்கம் இருந்து வந்தது.அதில் தலைமுறை தலைமுறையாக விளக்கேற்றும் பழக்கம் இருந்து வந்தது.  நவீன காலகட்டத்தில்    பாரம்பரிய நல்ல வழக்கங்கள் எல்லாம் அருகிப்போனது.  

                                                                        

                விளக்கில் பிரகாசிக்கும் தீபத்தை அருட்பெரும்ஜோதியாக வழி பட்டவர் வள்ளளார். பரம் பொருளின் அடையாளமாக விளங்குவதே தீப ஒளி. ஏற்றி வைத்த தீப ஒளி எங்கும் நிறைவது போல், இறைவனும் விளக்கேற்றி வழிபாடுவோர் மனங்களில் நிறைந்து விடுகிறார்.

                  ஒளி அது ஏற்றப்படும் இடங்களைப் பொருத்து அதில்  சூட்சம சக்திகள் தோன்றுகிறது.  அந்த விளக்கில் எரியும் அக்னியின் தன்மைகளுக்கும், வேறு காரணங்களுக்காக பயன்படும் அக்னியின் தன்மைகளுக்கும் சூட்சம நிலையில் வேறுபாடுகள் உள்ளன.

                    எந்த காரியத்திற்காக அக்னி பயன்படுத்தப் படுகின்றதோ அதைப் பொறுத்து அதனுடைய சூட்சம தன்மைகள் மாறுபடும், விளக்கின் தீப ஒளி, மின்சார விளக்கொளி, தீப்பொறி, மின்னல், சூரிய ஒளி, சந்திர அமுத ஒளி, என பல வகையான அக்னியின் அம்சங்களை காண்கிறோம். இவையாவும் ஸ்தல நிலையின் காணும் ஒளி நிலைகள்.

                     ஜடராக்னி என்பது உண்ணும் உணவு செரிப்பதற்காக உடலில் எரியும் அக்னி.  யோகத்தில் உயர, உயர தன்னைச் சுற்றி தோன்றும் அக்னி யோகக்னி  ஒருவருடைய  ஆன்மீக சக்தியை உணர்த்துவதாக அமைவது  AURA  எனப்படும் ஆத்ம ஒளியும் கூட பலவிதமான நிறங்களில் அமைந்து ஒருவருடைய தெய்வீக நிலையை குறிக்கும். உணர்வின் வேகத்தில் பாலுணர்வு தூண்டலில் வெளிப்படும் அக்னி காமாக்னி.  மன்மத தகனத்தில் முக்கண்ணனா சிவபெருமான் மன்மதனை எரித்தது. 

                     இன்றைக்கும் ஒவ்வொரு மனிதனுடைய உச்சத் தலைக்கு மேல் சூட்சமமாக அவனுடைய  படிநிலைக்கு ஏற்ப ஆத்ம ஒளி தோன்றுகிறது. மிக சிறந்த உத்தம நிலையில் உள்ளவர்களுக்கு இது ஆத்ம ஒளியாகவும், சாதாரண நிலையில உள்ளவர்களுக்கு தேக ஒளியாகவும், தேக காந்தியாகவும், அல்லது மங்கிய சாம்பல் நிற ஒளியாகவும். பாவச்சுமைகளுடன் பிரயோஜனம் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்களுக்க இலௌகீக கரிய இருள் சூழ்ந்து ஒளியற்ற நிலையாகவும் விளங்குகின்றது. 

                     நாம் மகான்களையோ, யோகிகளையோ நாம் தரிசிக்க செல்லும்போது  அவர்களின் உச்சந்தலையில் தோன்றுகிற  ஒளியின் தன்மைகளை வைத்து அவர்கள் அவரின் நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வார்கள். பண்டை திபெத்திய கலாச்சாரத்தில் லாமாக்கள் சிறப்பு பெற்றிருந்தார்கள். அவர்களை தேடி வருபவர்களின் ஒளி நிலையைப் பொருத்து தங்கள் குருவைப் பார்க்க அவர்களை அனுமதிக்கலாமா என்பதை முடிவு செய்வார்கள்.

                       நெருப்பு எரியும் போது அது மனிதர்களின் மன எண்ண அலைகளை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை. அதில் ஏற்படும் பதிவுகளை மற்ற பரிமாணங்களுக்கும் கடத்தும் தன்மை கொண்டவை.  யாகம் வளர்ப்பதும் இதன் தாத்பரியமே. மனிதன் யாகம் வளர்த்து தன் வேண்டுதல்ளை ஆகுதியிட்டு அக்னி முன் தெரிவிப்பது இதனால்தான்.

                     எல்லோருக்குள் பரம் பொருள் ஆத்ம ஜோதியாக உறைகிறார் என்பது உண்மையே ஆனால் அதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் பெரியோர்களால் தீபம் ஏற்றுவது சிறந்த வழிபாடாக எடுத்துவைக்கப்பட்டது. அக்னி வழிபாட்டில் புராதன அக்னி வகை என்று ஒன்றுண்டு அதை தரிசிப்பதும் வழிபடுவதும் மிகச் சிறந்த ஒன்று. மகாராஷ்டிரத்தில் ஷீரடி பாபாவின் சந்நிதியில் எரியும் அக்னி, வள்ளலார் ஒளி நிலை அடைந்த வடலூர் இன்றளவிற்கும் எரிந்து கொண்டிருக்கும் தீபாக்னி, மடைப்பள்ளியில் மக்களின் ஜடராக்னியால் ஏற்படும் பசி பிணி நீங்க நூற்றாண்டு காலம் அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் புராதன அக்னி.

                        ஏற்ப்படும் விளக்குள் அது ஏற்றப்டும் உலோகத்தைப் பொறுத்து அதன் சூட்சம சக்திகள் வெளிப்படும்.  தாமிர விளக்கு வைராக்கியத்தையும், வெள்ளி விளக்கு மன அமைதியையும், தங்க விளக்கு தாம்பத்ய உறவையும், ஆயுளை வளர்க்கும்  நவசத்தினம் பதித்து இதில் அன்னம், யாளி, சிங்கம், சூலம், நந்தி, சங்கு, சக்கரம் என்ற தங்கத்தால் இவ்வுருங்களுடன் கூடிய விளக்தில் தாமரை நூல் திரியில் நெய் விளக்கு ஏற்றி நவரத்தினங்களின் மேல்படும் தீப ஓளி இறைவன் மேல்பட்ட பிரதிபலித்து நம் மீது படும்போது எத்தகைய நவகிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் வெகுவாக குறையும்.

                        அகல்விளக்குகளில் சில வகைகள் உண்டு. களிமண்ணால் செய்து சுடாமல் இருப்பது இதில் தீபமேற்றி வழிபட வாத நோய்கள் தீரும். சுட்ட அகல் விளக்கில் ஏற்றும் தீபத்தை மணி  தீபம் என அழைப்பார்கள் ஒருவர் எத்தனை விளக்குகளை ஏற்றி வருகிறாரோ அதற்கு பலனாக இல்வாழ்வில் சகல சுகபோகங்களும் கிடைக்கும்  மறுபிறவியில் அரச பதவி கிடைக்கும். கோயில்களில் லட்சம் தீபங்களை எல்லோறும் சேர்ந்து ஏற்றுவதன் மறைமுக பலன் இதுவே.


அன்புடன்

சந்திர ஆதித்யன்.






                                                   

கருத்துரையிடுக

0 கருத்துகள்