Hot Posts

6/recent/ticker-posts

விபத்து நடக்கப் போவதை அறிந்து கொள்வது எப்படி

 


                                                                                                                                             வரும் முன் காத்தல்

                      ஒருவருடைய ஜாதம் முழுமையும் திரிகோண பாவ அடிப்படையில் அமைகிறது. திருகுறள் அதிகாரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பது இதற்கான சான்றை தருகிறது. அறம் என்பதை முதன்மையானதாக வைத்திருப்பது வாழ்க்கை தர்மம், தயை, நியாயம் சார்ந்ததாக அமைய வேண்டும் என்பது இதன் சூட்சமம், அதன் பிறகு மனித வாழ்க்கைக்கு உழைத்து பொருள் தேடுதல் என்பது வாழ்க்கையில் தேவைப்படுகிற செல்வம், அந்தஸ்து, பதவி போன்றவற்ளை அடையும் அமைப்பை பற்றி சொல்வது பொருட்பாலிலும்,  நியாயமான உடல் சுகம் பெற்று தனக்குப்பிறகு தனது சார்பாக தான் தேடிக்கொண்ட செல்வத்திற்கு  வாரிசாக மக்கட்பேறு என்பதை இன்பம் என்ற பிரிவிலும், கடைசியாக தான் வந்த நோக்கம் நிறைவேறிய பின் எல்லாவற்றையும் விடுத்து இறைவனை அடையும் நிலையை வீடு பேறாகவும் அமைந்திருக்கிறார் ஐயன் திருவள்ளுவர்.


                                                                          

          அதன்படி 1.5,9. என்பதை தர்ம திரிகோணமாகவும்,2,6,10 ஐ பொருள் திரிகோணமாகவும், 3,7,11, ஐ  காமத்திரிகோணமாகவும்,  4,8,12 ஐ மோட்ஷ திரிகோணமாகவும் ஜாதகத்தை துல்லியமாக கணிக்க உதவுகின்றன. 

          4,8,12ம் பாவங்களின் உபநட்சத்திராதிபதிகள் ஒரு நபருக்கு ஏற்படப்போகும் எதிர்மறையான சம்பவங்கள், எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் விபத்து, கண்டங்கள், நோய், அதானல் ஏற்படும் உயிரழப்பு  அல்லது அங்கஹீனம் ஆகியவற்றை குறிக்கிறது.

          சதாரணமாக 4,8,12 பாவ உப நட்சத்திரங்கள் தசா, புத்தி, அந்தரம் என்ற அளவில் அமையும் கிரகங்களே அவற்றை தீர்மானிக்கிறது. உதாரணமாக 4,8,12 பாவ உப நட்சத்திராதிபதிகள் சுக்கிரன்/சனி/சுக்கிரன் என ஏற்படுமாயின் இவருக்கு வாழ்க்கை முழுவதும் விபத்துகளே ஏற்படாது என்று சொல்லிவிடலாம். காரணம் ஒருவர் வீட்டில் மற்றவருக்கு நட்சத்திரம் இல்லை. அதாவது சனி வீடான மகர, கும்பத்தில் சுக்கிரனுக்கான நட்சத்திரம் இல்லை. அதே போல சுக்கிரனுக்கான வீடான ரிசபம், துலாத்தில் சனியின் நட்சத்திரம் இல்லை.இந்நிலை நல்ல அமைப்பு.மாறாக

           சனி/சுக்கிரன்/ குரு என்பதாக அமையுமானால் இவருக்கு விபத்துகள் காத்திருக்கிறது என்பது பொருளாகும்..காரணம் சுக்கிரன் வீடான துலாத்தில் சுக்கிரனின் நட்சத்திரம் பூராடம் இருக்கிறது. குருவின் வீடான தனுசில் குருவின் நட்சத்திரமான பூரட்டாதி இருக்கிறது.. மீனத்தில் சனிக்கு சொந்தமான உத்திரட்டாதி இருக்கிறது.இப்படிபட்ட அமைப்பு இருந்தால், மேலும் சுக்கிரன் வீடு அதாவது துலாம் குரு நட்சத்திரம் விசாகம் ஆகியவற்றுடன் பாகை அளவில் சனி 2 டிகிரி அளவின் நெருங்கி அமையுமானால் அது விபத்தை தரும்.

             மீனத்தில் குரு , சனி, சுக்கிரன் 7 டிகிரி 46 பாகை அளவில் அமைந்தால் விபத்தை தரும். இதே போல் தனுசில் குரு,சுக். சனி 21 டிகிரி  அளவில் அமையுமானால் விபத்தை தரும். 

          இந்த குரு, சனி, சுக்கிரன் இவர்களின் தசா புத்திகள் நடைபெறும் காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். இவர்களோடு அல்லது இவர்களில் யாராவது மாரக, பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என கவனிக்க வேண்டும்.

            இதே போல் அறம் சார்ந்த திரிகோணமான 1,5,9ம் பாவ உப நட்சத்திராதிபதிகள் ஒருவர் வீட்டில் மற்றவருக்கு நட்சத்திரம் இருந்தால் எப்படியாயினும் இயற்கைக்கு விரோதமான மரணம் நிச்சயம் சம்பவிக்காது. உதாரணமாக புதன்/குரு/சூரியன் என்றிருந்தால் அவருக்கு அகால மரணம் என்பது இல்லை. காரணம் புதன் வீடான மிதுனத்தில் குருவின் நட்சத்திரமான புனர்பூசமும், கன்னியில் சூரியன் நட்சத்திரமான உத்திரமும், குருவின் வீடான தனுசில் சூரியனின் நட்சத்திரமான உத்திராடமும்  மீனத்தில் புதனின் நட்சத்திரமான ரேவதியும் இருக்கின்றனர்.

               இதுவே சனி/புதன்/ சனி 1,5,9 என்று அமையுமானால் ஒருவர் வீட்டில் மற்றவருக்கு நட்சத்திரம் இல்லை எனவே இவரை பாதுகாக்கும் கிரக அமைப்பு குறைவு.

                                                               பரிகாரம்                                                                                                                                                                                                                                                                          சென்னை கோயபேட்டில் அமைந்துள்ள குறுங்காலீஸ்வரர் சிவன் கோயில உள் மண்டபத்தில் ஒரு தூணில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர்  விபத்து சம்பந்தமான ஆபத்துகளிலிருந்து காக்கும் அற்புத சக்தி படைத்தவர் அங்கே வாகனத்தின் சாவியை வைத்து வணங்கி ஆஞ்சநேயரின் காலடியில் நல்ல சாம்பிராணி வைத்து வணங்கி அதை எடுத்த வைத்துக் கொண்டு. மேற்கண்ட அமைப்பு உள்ளவர்கள் பயணம் போகும்போது வாகனத்திற்கு திலகமிட்டு அந்த சாம்பிராணியால் வாகனத்தை சுற்றி தூபம் காட்டு பயணத்தை  ஆரம்பித்தால் எதிர்மறை சக்திகளிலிருந்து வாகனம் காக்கப்படும். தவிர திருமண தடை உள்ளவர்கள் இந்த ஆஞ்சநேயரை வணங்கிவர தடை அகலும்.            

                  மேலும் தவிர்க்க முடியாத பயணம் போகவேண்டுமானால் போகன்வில்லா எனப்படும் வாசனையற்ற காகித பூக்களை சிறிது எடுத்து வண்டியில் வைத்துக் கொண்டு பயணிப்பது எதிர்மறை சக்திகள் வாகனத்தை தாக்காது.    தவிர கனகாம்பரம் எனப்படும்  வாசமில்ல மலரை பிரயாணத்தின் போது பெண்களின் தலையிலோ, அல்லது வாகனத்திலோ வைத்துக் கொண்டு பயணிப்பது எதிர்மறை சக்திகளை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டது அதனை தவிர்பது நன்று.

அன்புடன்

சந்திர ஆதித்யன்,

                                         

கருத்துரையிடுக

0 கருத்துகள்