Hot Posts

6/recent/ticker-posts

யார் அவர்?

               


                                                                                                                                       அணுவிற்குள் அணுவாய்

  பலர் பல காலங்களாய் அவரை தேடித்திரிகிறார்கள்.  ஆனால் யாருக்கும் அவர் அகப்படவில்லை.  அகப்பட்டவர்கள் அவரை பற்றி விளக்க முடியாதவகளாய் இருக்கிறார்கள்.  விளக்க முடிந்தவர்கள், தத்துவதார்தமாக சொல்கிறார்களே அன்றி இன்னார்தான் அவர் என்று நிரூபிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். 

                  தோன்றும் இவ்வுலகம் வெளிப்படுத்தும் விடயங்கள் எல்லாம் பொய் தோற்றங்களாகவே இருக்கிறது. ஒன்றை உண்மை என்று நம்பி அணுகினால் அது தோற்றப்பிழை என்கிறது. முதலில் கிரேக்கர்கள் இதைப் பற்றி தெரிவிக்கும் போது எல்லா பொருட்களும் துகள்களால் ஆனவை  என்றார்கள். உலகில் மிகத் தொன்மையான மெசபடோமிய நாகரீகத்தில் பொருளுக்கு உண்மையில் தின்மை இல்லை பொடிகளால் ஆக்கப்பட்டவை என உரைத்தார்கள்.




                                                     




                 இந்திய புராதன வேதங்களில் தோற்றங்கள் யாவும் மாயை உண்மையில் அதன் ஆதாரம் பரமஜீவன் எங்கும், எதிலும் கலந்திருக்கிற ஒரு விலக்க முடியாத ஒரு பொருள் என்றது.  தமிழ் சித்தர் இலக்கியங்களில் இதை அழகான தமிழில்அணுக்களால் ஆக்கப்பட்டவை தான் சகல உயிர், உயிர்ற்ற பொருள் என்றது. ஔவையார் தன் விநாயகர் அகவலில் அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி என்ற வரிகளில் திருக்குறளை சிறப்பித்திருக்கிறார்கள்.

               ஜட நிலை பொருட்கள் தோன்றிய பிறகு உயிர் பொருட்கள் தோன்றித் துலங்கத் தொடங்கியது.  ஜட பொருட்கள் அணுக்களால் ஆக்கப்பட்டவை என்ற போது உயிர் பொருட்கள் உயிரணுக்களால ஆக்கப்பட்டவை. கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் கூட்டமைப்பு. பல பரமாணுக்களின் தொகுப்பு ஜீன்கள் எனப்பட்டது. உயிர் பொருகள் யாவும் ஜீன்களால் கட்டமைக்கப்பட்பவை ஜீன்களில் பரம்பவை செய்திகளை நிரல்களாக வரிசைபடுத்தப்பட்டு செய்திகள் பதிவு செய்யப்பட்டவை . ஜீன்களை பிரித்தால் அவை D N A வால் ஆக்கப்பட்டவை என அறியலாம், மேலும் பகுத்தால் அவை R N A  புரதங்களால் வரிசை படுத்தப்பட்டவை என்பது தெரியவரும். அவற்றை மேலும் பகுத்தால் இயற்கையால் பதிவு செய்த இழைகளை மர்மானவையாக எப்படி யாரல் அங்கே வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியாத சிக்னல்காளவும் , அதிர்வலைகளாகவும் இருக்க.ம்.

                  இதற்கு மேலே அவரை தேட முடியாது பகுத்து பின் பகுத்து பிறகு அங்கே யாரும் இல்லை. காரணகர்த்தா இல்லை அல்லது தோற்றத்திற்கு புலப்படுவதில்லை. காரணமானவர் இல்லை என்றால் அதிலிருந்து தோன்றிய பொருட்கள் கட்புலனாகின்றனவே?  என்ன செய்ய?  அது எப்படி--?


                                          அப்பாலுக்கு அப்பாலாய்


                அவர் மேற்கண்ட விலாசத்தில் இல்லை எனும் போது வேறு அளவுகளில்  நுண்மையாக இல்லாமல் பிரம்மாணட வஸ்துகளாக இருக்கலாமோ?  தோன்றும் இவ்வுலகம் முதலில் எங்கிருந்து பரிணமித்து வந்தது. 

                13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு புள்ளியிலிருந்து பெரு வெடிப்பு மூலம் இப்பிரபஞ்சம் தோற்றம் பெற்றது, கிட்டத்தட்ட 600 மில்லியான ஆண்டுகளுக்கு பின் வாயு, மற்றும் அயனியாக்கம் அமைந்த ஹீலியம், மற்றும் ஹட்ரஜன் அணுக்கள் அதீத வெப்ப நிலையின் இணைந்து துகள்களாகவும், வாயுக்களாகவும் மாறி காணும் பிரபஞ்சத்தில் தோற்மாகவும் அவை விண்மீன் தொகுதிகளாகவும் கிரகங்களாகவும் அதற்கென கட்டுபடுத்தும் தலைவன் என்ற கருந்துளைகளாகவும் உருமாறியது.

               தற்போது காணும் பிரபஞ்சம் Observabel Universe  93   பில்லியன் ஒளியாண்டு விட்டமுடையதாக இருக்கிறது.. ஒரு ஒளியாண்டு என்பது 9.6 லட்சம் கோடி கிலோமீட்டர் தூரம் கொண்டது. காணும் பிரஞ்பசத்தில் ஒரு கோடி அண்டங்கள் இது வரை இருக்கும் என அவதானிக்கப்பட்டவை. நமது சூரியக்குடும்பம் வாழும் பால்வெளி அண்டத்தை ப் போல.

                  ஆனாலும் இப்பிரபஞ்சம் அப்படியே இருப்பதில்லை ஒளியைவிட வேகமாக ஒன்றை ஒன்று விலகி செல்கிறது. இந்த விலகிச் செல்லும் ஆற்றல் அவை எங்கிருந்து பெறுகிறது என பார்த்தால்  அதற்கு இன்னும் சரியான விடைகிடைத்தபாடில்லை. அறிவியலின் கூற்றுப்படி அவை அறிய முடியாத கருஞ்சக்தி Dark Energy  என்ற ஒன்றுஅவற்றை விரித்துக் கொண்டு செல்கிறது..  இந்த காஸ்மிக் வெப்பில் ஒரு குறிப்பிட்ட அளவுகள் வரையே அவற்றை அவதானிக்க முடியும்.

                 முடிவில் ஆழ்ந்த பாழ் வெளி பரப்பில் அவை தொலைந்து போகக்கூடும். பாழ் வெளி என்பது எது வரை என்று ஆராய்ந்தால் அதற்கு விடையில்லை, அதன் தோற்றம், எங்கே அதன் முடிவு எங்கே என்று உணரமுடியாது 

                நாம் தேடி வந்தவரின் விலாசத்தை இங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் யார்?


               தோற்றமும் முடிவும் அற்றவரும்சகல உயிர் , மற்றும் ஜட  பொருட்களில் இயங்கி வருபவரும் ஒய்வு ஒழிச்சல் அற்ற பெருங் கருணை உடையவரும் ஆன பரம்பொருளே அன்றி வேறு யார். மதங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெயரில் அழைக்கிறது.  நாம் சிவா என்றுஅழைப்போம். ஓம் நமச்சிவாய. 


                    நன்றி    

அன்புடன்

சந்திர ஆதித்யன்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்