Hot Posts

6/recent/ticker-posts

பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கும் நட்சத்திர வழிபாடு.

    

                            

                                                                                                                                                                                                                                                             நட்சத்திர    சாரம்                                                                                                                                                             

 அட்சய லக்கன பத்ததியில் நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்களை வைத்தே பலன்கள் கணக்கிடப்படுகின்றன,  எந்த நட்சத்திரம் ஜாதகருக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்து லக்கன பத்ததி முறையில் அந்த நட்சத்திர சாரம் பெற்ற கிரகம் எந்த மாதிரியான பலன்களை ஜாதகருக்க. தர கடமைபட்டது என்ற புரிதல் இருந்தால் அந்த கிரகம் சாதகமாக இயங்குமா? அல்லது அவயோகங்களை அதிகமாக செய்யுமா என்பதை அறிந்து கொண்டால் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.


                  ஒரு கிரகம் லக்கன பத்ததியின் அடிப்படையில் அவயோகம் செய்வதாக தீர்மானித்து விட்டால் அதிலிருந்து யாராலும் தப்பித்துவிட முடியாதுதான் ஆனால் பரிகார சூட்சமங்களை தெரிந்து வைத்திருந்தால் 90 விழுக்காடு அதன் பாதிப்பை குறைத்து விடலாம்.


                                                                   



          நாம் பிறந்தது எந்த நட்சத்திரம் ஆனாலும் . அதன் பின் தொடர்சியாக வரும் ஒவ்வொரு நட்சத்திர காலத்திலும் நாம் வாழ்ந்தாக வேண்டும், அட்ச லக்கினப்படி அந்த வருடத்தில்  அவரவரின் ஜாதகப்படி ஆட்சி செய்யும் நட்சத்திரங்களை அறிந்து அதன் மூர்த்தியாகிய கிரகத்தின் வழியே சில வழிபாடுகள் செய்ய வேண்டும்.

            வாழ்வில் தீயோர் தொடர்பு நீங்கி, நல்வாழ்வைப் பெறுவதற்காக அகஸ்திய மாமுனி வழங்கிய  ''நட்சத்திர சகாய திரட்டு ''  பாராயணம் செய்து வருதல் நல்ல  பலன்களை வழங்கவல்லது. இந்த மந்திரித்தை உச்சாடனம் செய்து சித்தி பண்ணிக் கொண்டு நதியின் கரைகளில் நின்று ஓதி சிறிது அந்த நீரை எடுத்து வீட்டில் வைத்துக் கொண்டால் நட்சத்திர தொடர்பு சம்பந்தான தோஷங்கள் நிவர்த்தியாகும்.

               உதாரணமாக ஒருவருக்கு அட்சய லக்ன பத்ததியின் படி மேஷ ராசியாக அமைந்து அதில் அஸ்வினி நட்சத்திரம் நடந்து கொண்டிருந்தால் காலபுருஷ தத்துவத்தின்படி செவ்வாய் ஒன்று, மற்றும் எட்டாம் ஆதிபத்தியம் பெரும் காரணத்தால் அஸ்வினி நட்சத்திர கிரகம் ஜாதகத்தில் கேது எங்கு அமைவாரோ அதன் படி சாதக பாதகத்தை தர கடமைபட்டிருக்கிறார். அஸ்வினி நட்சத்திரத்தை தொடர்ந்து  காலபுருஷனின் ஒன்பதாவது ராசி போகும் நாளில்  மற்றொரு ராசியான தனுசில் கேதுவின் நட்சத்திரமான மூலம் போகும் நாட்களில் ஆலய வழிபாடு நடத்தி நட்சத்திர சகாயத் திரட்டு மந்திரத்தை பாராயணம் செய்து சிறிதளவாவது அண்னதானம் செய்துவர கேதுவால் ஏற்படும் அவயோகம் ஆச்சிரியப்படதக்க அளவில் குறையும்.  கேது அட்டமத்தில் இருந்து காலத்தை நடத்தினாலும் அவயோகம் வெகுவாக குறையும், இந்த பிரார்தனையின் போது முன் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் எந்த தடைகள் இல்லாமல் நிறைவேறும்.

                 வியாபார ஸ்தலங்கள் அலுவலகம், போன்ற இடங்களில் பூஜை செய்து சேகரித்து வைத்திரும் தீர்தத்தை வைத்துக் கொண்டால், எதிரிகளின் தீய சக்தியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்,

                    தம்முடைய பிறந்த நான், நட்சத்திரம் ஆகியவற்றை அறியாமல் வாழ்கின்ற, ஏழை எளியவர்கள் நல் வழி காண வேண்டி. நட்சத்திர சகாயத் திரட்டை புத்தாடைகளை வைத்து ஜெபித்து அவற்றை அவர்களுக்கு தானம் செய்தால் நன்னிலை பெறுவர்.  நட்சத்திரங்களால் ஏற்படும் சாதகமான அம்சங்களை அதிமாக ஜாதகரும் பெறுவார்.


அன்புடன்

சந்திர ஆதித்யன்.

                  

                                                                         

    

கருத்துரையிடுக

0 கருத்துகள்