![]() |
ராகு கேது |
பொதுவாக ராகு கேதுக்கள் எங்கே இருந்தால் தோஷம் என்று நிறைய மக்களுக்கு சரியான புரிதல் இல்லாத காரணத்தால் லக்கினம், இரண்டாவது பாவம் என்ற குடும்ப ஸ்தானம் போன்றவற்றில் அமையும் போது ராகு. கேது தோஷம் உள்ளது என பொத்தம் பொதுவாக கூறும் வழக்கம் இருக்கிறது, நமது பாரம்பரிய ஜோதிடத்தில் சில அமைவிடங்களை கெடுதல் செய்யாத இடங்கள் என்று சொன்னாலும்கூட அது முழுவதுமாக நன்மை செய்துவிடும் என்று சொல்வதில்லை, உதாரணமாக மேஷம், ரிசபம் கடகம், கன்னி, மகரம் போன்ற இடங்களில் இருக்கும் ராகு கெடுபலன்களை அதிகமாக செய்வது இல்லை, ஆனால் சில நிலைகளில் மிதுன லக்கினத்திற்கு ராகு ஒருவரே லக்கின சுபராக வருவதும் கவனத்திற்குரியது., நிறைய விதிகள் அதை தொடர்ந்து விதிவிலக்குள் என இருக்கும்.
பொதுவாக ராகு கேதுக்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொருத்தும், தங்களுக்கு வீடு கொடுத்த கிரகத்தின் காரகங்களைப் பொருத்தும், தங்களுக்கு கேந்திரியங்களில் கிரக காரங்கங்ளைப் பொருத்தும், தங்களை பார்வை செய்யும் கிரக காரகங்களைப் பொருத்தும், கடைசியாக தங்களுக்கு சாரம் கொடுத்த நட்சத்திரங்களைப் பொருத்தும் தங்களின் பலன்களைச் செய்யும். இங்கே சாரம் கொடுத்த நட்சத்திரங்கள் என்பது நுண்ணிய நிலை.
அட்சய லக்னத்தின் சிறப்பு
பாரம்பரிய ஜோதிடத்தை கட்டடத்தின் அஸ்திவாரம் என்றால் அதன் மேல் கட்டப்படும் கட்டிடம் என்பது சாரநாதனின் கைவண்ணம்தான். துல்லியதன்மை என்பது ஜோதிடத்தை மேலும் மெருகூட்டும்.
அட்சய லக்ன பத்ததியின் முறையில், உதாரணமாக மீன லக்கினத்தை எடுத்துக்கொள்வோம், மீனத்தில் பிறந்தஒருவருக்கும் லக்கினத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் இருப்பதாக கொள்வோம், இங்கே லக்கினத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் கெடுதல் செய்வதில்லை, ராகு, கேது தோஷம் என்றாலும் கூட, மாறாக மிதுனத்தில் இருக்கும் ஒருவருக்கு அட்சய பத்தயின் முறையில் பார்த்தால் திருவாதிரை நட்சத்திரத்தில் போகும் போது உண்மையான ராகு, கேது தோஷத்திற்கு ஆட்படுவார், ராகு பெயர்ச்சி ஆகும்வரை , அல்லது ராகு திசை ராகு புத்தி போகும் காலங்கள் பிரச்சனைக்குரியதாக இருக்கும், தொழில், ஷேர் மார்கெட், போன்ற வகைகளில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும், மிதுன லக்கினகாரர்களுக்கு இந்த கோட்சார ராகு கடுமையான தோஷத்தை தருகிறார்.
ஆக ஜென்ம லக்கினத்தை பார்த்து ராகு,கேது தோஷம் என சொல்வதை விட ராகு தற்போது பயணம் செய்யும் நட்சத்திரம் யாருக்கு பாதகமாக இருக்கும் என்பதை வைத்து பலன் எடுத்தால் துல்லியமாக எடுக்கமுடியும், அட்சய லக்னம் பத்ததியின் முறையில் கணித்தால் ராகு போகும் பாதையை கணிக்கமுடியும்,
நன்றி.
அன்புடன்
சந்திரஆதித்யன்
Alp. Astrologer.
0 கருத்துகள்