மலர்களின் அற்புத சக்திகள்
பூக்களை விரும்பாவதவர்கள் யார்? மலர்களின் அழகு, வசிகரம், மணம் ஆகிய விடயங்களைத் தாண்டி மனதிற்கும் மலர்களுக்கும் அதிக தொடர்புகள் உண்டு, காற்றில் ஏறி தன் நறுமணத்தைப் பரப்பும் அதே வேளை அதன் ஊடே மெல்லிய அதிர்வலைகளையும் பரப்பும் தன்மை கொண்டவை. மனதனி எண்ண அலைகளின் தொடர்பில் உணர்வு நிலையும் மாற்றத்தை விளைவிக்கும், நல்ல நறுமணம் மிகுந்த அறையில் நுழைபவர் அவர் வெளியே இருந்து எந்த உணர்வு நிலையில் இருந்து வந்தவராக இருந்தாலும் நறுமணம் மிக்க அறையில் நுழையும் போது ஒரு அமைதி தன்மைக்கு திரும்புவார். மலர்களின் நறுமணம் சில தெய்வீக சக்திகளை உள்ளடக்கியவை.
அகத்தியர் எழுதிய குண பாடம் மலர்களின் மருத்துவம் சார்ந்த விடயங்களை விரிவாக தெரிவிக்கும் ||நூல் மலர்களின் தன்மைகள் அதை பயன்படுத்தும் முறை உள்ளுணர்வின் அதன் மணம் ஏற்படுத்தும் மாற்றங்கள், குணமாகும் நோய், முடிவாக மலர்களின் அதிர்வுகள் எந்த கிரக காரகங்களை பிரதிபலிக்கிறது போன்ற அம்சங்களை விவரித்து செல்கிறது.
காதலில் விழுந்த ஒருவர்" I Love You." என தன் காதலை தெரிவிப்பதை தாண்டி ஒரு ரோஜா மலரை காதலிக்கு பரிசளிக்கும் போது அவரின் உணர்வுகளை எதிர்தரப்பு புரிந்து கொள்வது சுலபமாகிறது. பூக்களுக்கும் உணர்வுகளுக்கும் சம்பந்தம் உண்டு.
பண்டைய வரலாற்று காலங்களில் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களில் மறவர்களின் வீரத்தை தூண்டும் வகையில் மார்பில் சிகப்பு மலர்களும், வெற்றி பெற்றபின் அதன் இறுமாப்பு உணர்வுகளை வெளிப்படுத்த தலையில் வெட்சி பூ அணியும் வழக்கம் இருந்தது. இதற்கு புறநானுற்றில் ஏராளமான சான்றுகளை காணலாம்.
மலர்களில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள்
சூரியன் நெருப்பு கிரகம், உடலின் மலரும் ஆத்ம சொரூபத்தின் குறியீடு தாமரை மலர். மூளை பலத்தை மேம்படுத்தி சிறந்த நினைவுத் திறனை அதிகரிக்கவல்லது. மூளையில் தாமரை மலர்வது அதீக தூரியதீத நிலை, மேம்பட்ட ஆனந்த உணர்வு. தாமரையின் அதிர்வில் மனம் தூண்டப்படும் போது தெய்வீக அன்பு மனதில் ஏற்படும்.
சந்திரன். உயிர்களின் தாய். தன் பதினாரு கலைகளை விரிக்கும் போது மனம் வளமுடன் சிந்திக்கத் தொடங்கும். குறீயீடு மல்லிகை மலர். மனதை ஒய்வு நிலைக்கு கொண்டு செல்வதும், இனிய உணர்வுகளை அதன் மூலம் தூண்டும் வலிமை படைத்தவை. காதல் , காமம் போன்ற உணர்வுளை தூண்டும் அதிர்வலைகளை கொண்டவை.
செவ்வாய் உடலின் வலிமை, வீரத்தின் அடையாளம், சீற்றத்தின் பிரதிபலிப்பு. மோதி வெற்றி பெற துடிக்கும் மனம். ஆளுமை எண்ணத்தின் குறியீடு செவரளி. வாசம் மிகுந்த மலர்களை மணத்துடன் அதிரவுகளை கடக்கும் திறன் குறைவு. வாசமில்லா மலர்கள் கடத்தும் அதிர்வெண்களின் தூரம் அதிகம். பார்வையில் படும்போது மனதின் உள்ளுணர்வுகளில் கலந்து வினை புரியும்.
புதன் ஆற்றலை நரம்புகளின் வழியே உணர்வுகளாய் கடத்தும் நுண்மான் நுழைபுலம் மிக்க கிரகம். குறியீடு வெண் காந்தல் மலர். பொதுவில் செங்காந்தல் , வெண்காந்தல் மலர்கள் நஞ்சை கொண்டவை. மருத்துவ பயன்பாட்டில் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பயனபடுபவை. காந்தள் மலர்களின் அதிர்வுகள் மூளையின் கூரிய உள்ளுணர்வுகளை தூண்டுபவை. எளிதில் எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலை தருபவை.
குரு நேர்நிறை ஆற்றல் தெய்வீகத் தன்மையை தூண்டுபவை சுபத்துவம் மிகுந்த பிரதிபலிப்பு ஒளி வீச்சைக் கொண்டவை. குறியீடு வெண் முல்லை மலர்கள். தெய்வீக வசியத்திற்கான அதிர்வுகளைக் கொண்டவை. சுக்கிரன். பீதாம்பரிதாரியும், காக்கும் செயலை செய்யும் கடவுளான நாராயணனின் பெருவிரலில் கட்டபட்ட கிரகம். போகத்தின் தன்மை எல்லாம் எனது காலடியில் என்ற குறியீட்டுடன் திருவரங்கத்தில் சயனிப்பவர். சுக போகத்தின் குறியீடு வெண் தாமரை மலர். மூளையின் ஆற்றலை வளப்படுத்தும் தன்மை, மூளையில் லயம் அமைந்தாலன்றி மனம் சுகங்களில் ஈடுபடமுடியாது. மனம் ஒத்துழைக்கவில்லை எனில் உடல் எந்த சுகத்தையும் அனுபவித்தாலும் அதனால் கிடைக்கும் பயன் ஒன்றுமில்லை. உடலும், மனமும் சேர்ந்து ஒத்துழைக்கும் போது எந்த செயலும் இன்பத்தை தருவதாக அமையும். வெண் தாமரை மலருக்கு மற்ற மலர்களை காட்டிலும் அது வெளியிடும் அதிர்வுகள் அதிகம். சனி இருள் தன்மை நவகிரகங்களின் அதிக விளைவுகளை தருவதில் சனியே முதன்மையான கிரகம். இருள் தன்மை தன்னுளே என்ன வைத்திருக்கிறது என யூகிக்க முடியாத இருள் தன்மை, மறைப்புத் திறன், நல்ல நல்ல நிலை அதிர்வுகள் இருந்தாலன்றி அவற்றை அறிய முடியாதவை. குறியீடு கருங்குவளை மலர்.. பிரபஞ்சத்தின் விரிவு எப்படி நடக்கிறது என்ற இது வரை யாராலும் அறியமுடியாத கருஞ்சக்தி, குவளை போன்ற முதல் தோற்றத்தில் விரிந்து எல்லையில்லாமல் விரிந்து கொண்டிருப்பவை. அதிர்வுகள் மர்மமானவை. உள்ளுணர்களில் அதிர்வுகள் பரவும் போது அதில் தூண்டப்படும் உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதவை. ராகு எதையும் பிரண்டப்படுத்துவது. உடல் இன்றி தலை மட்டும் செயல்பாட்டில் என்பதால் மனம் நினைப்பதை உடல் இல்லாத நிலை. சிந்தனைகள் யாவும் கற்பனையில். ப்ரோட்டைப்பை தாண்டி வளர்வதில்லை. குறியீடு மந்தாரை மலர், இதன் அதிரவுகள் வாசி யை கட்டுபடுத்தக்கூடிய தன்மை கொண்டவை. சுவாசம் சம்பந்தமான விடயங்களின் நூழைந்து அவற்றை சீர் செய்யும் தன்மை கொண்டவை. கேது செவ்வல்லி மலர். பெருதன்மை அலைகளை கொண்டவை பரவும் இடத்தில் ஏகந்த உணர்வுகளை தூண்டும். பரோபகார தன்மைகளை வெளிப்படுத்தும். சுயநலமற்ற உணர்வுகளை தூண்டி பாரபச்சமற்ற எண்ணங்களைத் தூண்டும். நன்றி. அன்புடன்
சந்திர ஆதித்யன்,
0 கருத்துகள்