வலிமையின் சின்னம்
இராசி கட்டத்தில் முதல் இராசி என குறிப்பிடப்படும் மேஷத்திற்கும், எட்டாவது ராசியாகிய விருச்சிகத்திற்கும் அதிபதி செவ்வாய், முதல் ராசி ஜாதகரின் உடல், தோற்றம், குணம், பண்பு போன்ற அவரை சார்ந்தது பற்றி தெரிவிக்கிறது, அதே போல் எட்டாவது ராசி அயுள், வாழ்நாட்கள், மரணம் போன்ற சம்பவங்களை குறிக்கிறது.
அடுத்து வரும் 9.10,11,12 தர்மம், கர்மம், ஆத்ம திருப்தி, மோட்சம் போன்ற நிலைகள் இறப்பிற்கும் பின் தொடரும் நிகழ்வுகள், எனவே மனிதன் வாழும் காலங்கள் 1 முதல் 8ம் ராசிகளுக்குள் அடங்கிவிடுகிறது. ஆக இந்த நிகழ்வுகளை தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய இந்த நான்கு ராசிகளே உறுதி செய்கின்றன. இந்த நான்கு ராசி அதிபதிகளான குரு, மற்றும் சனி தீர்மானிக்கிறது, எனவேதான் சனி, குரு இருவரும் ஜோதிடத்தில் பலம் வாய்ந்த கிரகங்களாக விளங்குகின்றன,
சூரிய குடும்பத்தில் பூமியை தொடர்ந்து வெளிபுற வட்டத்தில் செவ்வாயும் பூமியின் உட்புற வட்டத்தில் சுக்கிரனும் அமைந்து இரு கிரகங்களின் அருகாமை புவியில் ஒரு அதிக ஈர்ப்பை பேலன்ஸ் செய்கிறது. இதன் காரணமாகத்தான் செவ்வாய் தோஷம் என்பதை உல்லாசம், இன்பம் , கேளிக்கை, திருமணம், போன்ற சுக்கிரனின் நிலைகளை வைத்து கணக்கிடப்படுகிறது, கிரகத்தின் நிலைகளை வைத்து சாதக, பாதகங்களை தீர்மானிக்கப்படுகிறது,
இப்போது செவ்வாய் கிரகத்தை பற்றி அட்சய லக்ன பத்ததியின் முறையில் ஆராய்வோம், செவ்வாய் அதிக வலுவுடன் இருக்கும் இடம் மகரம் அங்கே சனியின் வீட்டில் அவிட்ட நட்சத்திரத்தில் 2வது பாதத்தில் அமைகிறது. இப்படி அமைவு கடக லக்னம் அட்சய லக்னமாக போகும் காலம் உள்ள ஜாதகருக்கு மிக நல்ல அமைப்பு, எப்படியெனில் மகரத்தில் இருந்து கொண்டு 4ம் பார்வையாக 10ம் வீட்டையும், 7ம்பார்வையாக லக்னத்தையும், 8ம் பார்வையாக 2ம் பாவமான குடும்பம், வருமான ஸ்தானத்தையும் பார்பது நல்ல வருமானத்தையும் தவிர 10 மற்றும் 5 இடத்திற்கான ஆதிபத்யதை பெற்று வருவதால் குழந்தைகள் வழியாக செழிப்பையும் அடைவார்கள். அதே சமயம் ஜாதகருக்கு 7ல் செவ்வாய் அமைவதால் செவ்வாய் தோசத்திற்கும் ஆட்படுவார்,
உண்மையில் ஜாதகர் பிறப்பு லக்னத்தை வைத்து ஆராய்ந்தால் அப்போது செவ்வாய் தோசம் அற்றவராக பிறந்திருக்கலாம், அட்சய லக்கன பத்ததியின் வழியே கணக்கிடும் போது கடகம் அட்சய லக்னமாக அமையும் 10 வருட காலம் அவர் செவ்வாய் தோசத்திற்கு ஆட்படுவார். திருமணகாலம் என்றால் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணின் இடுப்பு எலும்பு அமைப்புதான் அவருக்கான சுக பிரசவத்தை தருகிறது. இடுப்பு எலும்பின் அமைப்பு ஒத்துழைப்பு தராத போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நிகழும் குறிப்பாக அட்சய லக்ன அமைப்பு விருச்சிகத்தில் செல்லும் போது செவ்வாய் மிதுனத்தில் அமைந்து வலுவிழக்கும் கடக ராசிக்கு அருகில் இருப்பது சாதகமற்ற நிலையில் இந்த நிகழ்வு அமையும். வெப்ப கிரகமான செவ்வாய் பெண்கள் நெற்றியில் வைக்கும் செந்நிற பொட்டிற்கு காரகர், உயிராகிய காலபுருச தத்துவத்தில் மேஷம் உயிர் ஆற்றலாக வருவது, எனவேதான் மனிதன் இறந்தபிறகு உடலின் நெற்றிப் பொட்டுதான் முதலில் குளிர்ந்து போகும்
எனவே அட்சய லக்கின பத்ததியின் காலத்தை கணக்கில் கொண்டு அப்போது நடக்கும் பத்து வருட காலத்திற்கு செவ்வாய் நிலையையும், சுக்கிரன் நிலையையும் மற்றும் சந்திரன் நிலையையும் கவனமுடன் கணக்கிட்டு திருமண காலத்தில் பொருத்தம் அமைக்க வேண்டும்.
நன்றி,
அன்புடன்
சந்திர ஆதித்யன்.
தொடர்புக்கு
chandraadhithiyan.gmail.com
0 கருத்துகள்