பிரபஞ்சத்தின் காலபுருஷச தத்துவம்
13,8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் படைப்பு என்பது பெருவெடிப்பில் நிகழ்ந்தது அதில் புராதன இந்து மதத்தின் கோட்பாட்டின்படி கலியுகத்திற்கு 4,32,0000 வருடங்கள், த்வாபரயுகத்திற்கு 8,64,000, துவாபரயுகத்திற்கு 17,28,000 வருடங்கள் க்ருதயுகத்திற்கு 43,20,000 வருடங்கள், ஆக மேற்கண்ட நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மகா யுகம் என வரையறுக்கிறது, இப்படி ஆயிரம் மஹா யுகங்கள் சேர்ந்து ஒரு கல்பம்,
இது படைப்புத் தொழில் செய்யும் பிரம்மாவின் ஒரு பகல் பொழுது, ஒரு கல்பம் என்பதை மநுக்கள் என்ற ஆட்சியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிகிறார்கள், மநுக்கள் என்ற பெயரில் ஆட்சி புரிவதால் நமக்கு மனுசன் என்ற பெயர் வந்தது, இப்போது "ச்வேத வராஹ கல்பம்" என்ற காலத்தில் வைவஸ்த மனுவின் காலத்தில் ஏழாவது கல்பத்தில் நாம் இருக்கிறோம், முதல் கல்பத்தில் எப்போது இப்பிரபஞ்சத்தில் நமது பால்வெளி அண்டம் தோன்றியது என பார்த்தால் அது விஞ்ஞானத்தில் எப்போது பிரபஞ்சம் தோன்றியத என்ற கணக்கிற்கு அருகில் இருக்கும்.
14 மநுக்கள் ஆயுட்காலமும் சேந்த்து ஆயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவிற்கு பகல் என்றால் அதன் அளவு 4.32.00,000 வருடங்கள், இது பிரம்மாவின் பகல் பொழுது இதே அளவு ஒரு இரவு மொத்தம் 834 கோடி வருடங்கள் பிரம்மாவின் ஒரு முழு நாள்,. அதன் ஆட்டம் கலைக்கப்படும். அதன் பேர் "பிரளயம்" இதே போல் பிரம்மாவின் ஒரு வருடம் அதன் பெயர் "ஸ்ம்வத்ஸரம் ஸரம்" இப்படி நூறு வருடங்கள் சேர்ந்துது பிரம்மாவின் ஆயுள், இப்பிரபஞ்சத்தி ஆயுளும் இதுவே, அறிவியலின் கணக்குப்படி பாதி அயுளை இப் பிரபஞ்சம் முடித்து விட்டது. வேதத்தின் கணக்கும் இதுவே.
நமது கதிரவன் பால்வெளி அண்டத்தை ஒரு சுற்று முடிக்க 22,5 கோடி வருடங்களை எடுத்துக் கொள்கிறது. இதுவரை 20,5 சுற்றுகளை முடித்துள்ளது, சூரியன் ஒரு மத்தியகால வயதுடைய நட்சத்திரம், இன்னும் சற்றேறக்குறைய நமது சூரியன் 400 கோடி ஆண்டுகள் ஒளி வழங்கும். அதன் பின் செம்பூதமாகி விரிந்து பின் வெடித்து தன் ஆயுளை முடிக்கும், வேதத்தின் கணக்குப்படி இன்னும் 423 கோடி ஆண்டுகள் உயிர் வாழும், இங்கே அறிவியல் கணக்கீடும், வேதத்தின் கணக்கீட்டிலும் ஒற்றுமை தன்மையை காணலாம்.
காலபுருஷத்தத்துவம்
சூரியன் சித்திரை மாதத்தில் ஒரு மாதம் மேஷத்தில் சஞ்சரித்த பின் மீனம் வரை ஒரு சுற்று முடிக்க ஒரு வரும் ஆகிறது. சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால்நாட்கள் என்ற அளவில் 12 ராசிகளையும் கடக்க 28 நாட்கள் ஆகிறது. செவ்வாய் 45 நாட்கள், புதன் 30 நாட்கள், குரு 1 வருடம், சுக்கிரன் 30 நாட்கள், சனி 2வருடம் 6 மாதங்கள், ராகு மற்றும் கேது 1 வருடம் 6 மாதம், இக்காலக் கணக்கு கோட்சாரம் எனப்படுகிறது, பிரஞ்ச வீதியில் சூரிய சந்திரன்கள் சஞ்சரிக்கும் போது அது பயணம் 12 நட்சத்திர மண்டலங்களின் வழியாக பயணிக்கும் போது அதன் கதிர்வீச்சுக்ளை சந்திரன் கிரஹித்து பூமியில் செலுத்தும் காலகணக்கீடுகள் மற்றும் கிரங்கள் பெறும் கதிர்வீச்சுகள் தாங்கள் பெற்றதை தங்களின் சுய கதிர்களுடன் இணைத்து சந்திரன் வழியாக பூமியில் பிரதிபலிக்கிறது.
அதன் அளவுகள் ஜோதிடத்தில் தசா புத்திகளாக பிரிக்கப்பட்டு ஒருவர் பிறக்கும் போது எந்த இடத்தில் சூரியன் இருந்ததை வைத்து லக்கன பாவமாகவும் சந்திரனை வைத்து ராசியாகவும் பிரிக்கப்பட்டு ஜோதிடத்தில் பலன்கள் கணிக்கப்படுகிறது.
அட்சய லக்ன பத்தயில் இதன் அடிப்படையில் இன்னும் மேம்படுத்தி வயதிற்கு தகுந்தபடி லக்ன நகர்வை கணக்கில் கொண்டு தற்போது எந்த ராசி, எந்த லக்னம் செயல்பாட்டில் உள்ளது என்பதை நட்சத்திர சாரத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்து பலன் பார்க்கும் துல்லியதன்மை வியக்க வைக்கும் அளவிற்கு பலன் எடுக்கமுடியும்.
ஜாதகத்தில் அவர் பிறக்கும் போது எந்த லக்கனம் என்பதை அடிப்படையாக வைத்து வயதின் லக்கனம் தற்போது எது என்பதை ஆய்வு செய்தல் வேண்டும். ஒரு ராசியில் இயங்கும் லக்னம் 10 வருடங்கள் 1 மாதம் 4 நாட்கள் என்ற அளவில் இயங்கும். அந்த காலகட்டத்தின் அவர் எந்த ராசி, லக்னத்திற்குள் வருகிறார் என்பதை கணித்து அதற்கு யோகர்கள், அவயோகர் யார் என்பதை வைத்து பலன் எடுத்தால் துல்லியத்தன்மை வெளிபடும் என்பது கண்கூடு.
நன்றி,
அன்புடன்
சந்திர ஆதித்யன்
ஜோதிட ஆலோசனைகளுக்கு
chandraadhithiyan@gmail.com
0 கருத்துகள்