Hot Posts

6/recent/ticker-posts

சிவா .என்ற..நாட்டியகாரன்

                          


 எங்கும் எதிலும் சிருஷ்டியின் நடனம்                                               

               நடனகர்த்தா தனது செஞ்சடை விரித்து இரு தாமரையால் வடிவமைக்கப்பட்ட மேடையில் நடனமாடுகிறார். பிரபஞ்சம் இயங்கும் விதம் ஒரு நாட்டியமாக இருக்கிறது. அவர் நடனம் நோக்கமின்றி இருப்பதாக தெரியவில்லை. இதன் ஊடார்ந்த அறிவில் ஒரு ஒருங்கிணைப்பும் ஒத்திசைவும் இருக்கிறது. ஆகவே, படைப்பு ஒரு நாட்டியமாக இருக்கும் காரணத்தால், இறைமையை ஒரு நடனசபாபதி என்று போற்றுகிறோம். 

              சிவா என்பது ஒன்றுமில்லாதது என்பதைதான் குறிக்கிறது. அது வெட்ட வெளி,  நடனமாடிக் கொண்டிருக்கிறது. அது நாட்டியமாடிக் கொண்டிருப்பதால் அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 


          அவர் ஆடும் நடனம் அதில் அவர் வெளிப்படுத்தும் முத்திரைகள் அவற்றில் தனது நான்கு கரங்களையும், கால்களையும் பல்வேறு விதமாக சேர்த்தும்,பிரித்தும்,உயர்தியும், உடலை நிமிர்த்தியும்,தளர்த்தியும் பல்வேறு விதமான அசைவுகளை பட்டியலிட்டால் நூற்றியெட்டு நடன பாவங்கள் இவை நடனகலையின் பரிபூரணத்தின் ஒரு விளக்கம். 

          இந்த நூற்றியெட்டு பாவங்கள் நடன நோக்கத்திற்கானது மட்டுமில்லை. ஒரு பேரறிவு இந்த அழகியலைக்கொண்டு வேறு ஒன்றையும் உணர்த்துகிறது.  அதில் ஒரு நாட்டிய பாவம்” தலபுஷ்பபுடம்” அது இரண்டு மேல் சுழற்சி துகள், ஒரு கீழ் சுழற்சித் துகள் இணைந்து உருவாகும் ஒரு அணுவின் தோற்றத்தைப் போல இருக்கும்.

      “ஸ்கலிதம்” என்ற நடனபாவம் ஒன்றுமற்ற வெளியில் முதல் தோற்றம் வெளிப்படுவதைக் குறிக்கும்.” குஞ்சிதம்” என்ற நடனபாவம் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட படைப்புக்ளைக் குறிக்கிறது. “சன்னதம்” தோற்றத்தில் உதவிய பிரமாண்டசக்திகள் ஒரு கட்டுக்குள் வைக்கப்பட்டதை குறிக்கும். “லலித்தோருகம்” பல்வேறு நடனபாவங்கள் பேரறிவின் படைப்பையும், அதன் துல்லியமான இயங்கங்களையும் ஒரு ஒழுங்கையும் குறிக்கிறது. 

     இந்த பிரபஞ்சப் படைப்பின் பேரறிவை வேதத்தில் ஒரு பகுதியான “ப்ருஹதாரண்யக” உபநிஷத்தில் ஈஸ்வரன் என்றும் வேதம்,ஈஸ்வரனின் சுவாசம். அந்த சுவாச அதிர்வுகளே வேதமானது. வேதம் மந்திரங்களால் வெளியெங்கும் நிறைந்திருப்பது அது படைத்தலை ஒட்டுமொத்தமாக நிகழ்த்தும் வல்லமை பெற்றது. பிரபஞ்ச படைப்புகளுக்கும் அப்பாற்பட்ட பேரறிவு இதில் இருக்க, பிரம்மா நமது உலகம்,மற்றும் பிரபஞ்ச படைப்பாக்கத்திற்கு வேண்டியதை மட்டும் விண்வெளிப் பதிவுகளில்     இருந்து கிரஹித்து எடுத்துக்கொண்டார். 

     வேதமே சந்தஸ் என்ற ஒரு ஒருகிணைந்த சீரான அதிர்வுகளால் ஆனது. பரவெளியெங்கும் அதிர்வுகளால் உண்டான பதிவுகளே சாசுவதமாக நிறைந்திருக்கிறது. வேதத்தை ரிஷிகள் சொன்னதாக வரும் வேதமந்திரங்கள் எல்லாம் அவர்களின் பெயர்களில் இருக்கும். ஆனால் உண்மையில் அவற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக அவர்கள் ஆகாயப் பதிவுகளில் இருந்து அவர்கள் கிரகித்துக் கொண்டதை வெளியிட்டார்கள் பின்பு அவை அவர்களின் பெயர்களில் வெளிவந்தது. நான்கு வேதங்களும் இப்படி உருவாக்கப்பட்டவைதான். வேத அட்சரங்களை சரியானபடி உச்சரித்தால்தான் நன்மை ஏற்படும் என்பதால் அதற்கான ஸ்ருதி இலக்கணங்களை வகுத்து வாய்மொழியாக தங்களது சீடர்களுக்கு பயிற்றுவித்தார்கள். எனவே தற்கால பிரபஞ்சத்திற்கு தேவையான விஷயங்கள் மட்டுமே அவர்கள் ஆகாயப்பதிவுகளிலிருந்து கிரகித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என்கிறது. ​  

     ஈஸ்வரனின் சுவாஸம் சப்த ரூபத்தில் இருக்கிறது என்பதும், பிரம்மா இந்த சப்த ரூபத்தைக் கொண்டுதான் சிருஷ்டியைப் படைத்தார் என்றால் நாகரீக அறிவிற்கு இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்று தோன்றும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால், பெரிய விஞ்ஞான உண்மையே இதில் இருக்கிறதென்று தெரிகிறது. 

     இங்கு ஈஸ்வரன், பிரம்மா போன்றவர்களை விலக்கிவிட்டு, அங்கே பரவெளி, துகள்கள், அதிர்வுகள் என்ற பதங்களை சேர்த்துப் பார்த்தால் நாம் விஞ்ஞானத்தின் அருகில் இருப்பதை உணர முடியும்.

                                                           நன்றி

அன்புடன்

சந்திர ஆதித்யன்,

கருத்துரையிடுக

0 கருத்துகள்