Hot Posts

6/recent/ticker-posts

எல்லையற்ற இரகசியம்

    கருமைய பதிவு (கேது) கருஞ்சக்தி விரிவு (ராகு) 


            ஒரு பொருளைப் பார்க்கிறோம் எனில் அதன் புறத் தோற்றம் பார்பவர்களின் கண்களில் வழியாக மூளையில் பதிவாக ஏற்படுகிறது. ஒரு ஒலிநாடாவில் ஒலி பதிவு செய்யப்படுவது போல மூளைச் செல்களில் அப்பொருள் கண்களில் பிரதிபலித்ததை பதிவாக அமைத்துக் கொள்கிறது.

              மூளை செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் ஜீவ காந்த ஆற்றலின் காரணமாக கருமையத்தில் இருப்பாக வைக்கப்படுகிறது. பார்த்தது, உணர்ந்தது, முகர்ந்தது, நினைத்தது, சுகித்தது, போன்ற பஞ்ச பூத தத்துவங்களான காற்று, நீர், நிலம், நெருப்பு, வெளி போன்றவற்றின் அனுபோகங்களினால்  உடல் அனுபவிக்கும் பயன் பாடுகளில் மூலம் உருவாகின்ற பதிவுகளை,  உடனுக்குடன் அலைகளாக மாற்றப்பட்டு ஜீவ காந்தம் எனப்படும் உடலின் கரு மைய தளத்தில் பதிவுகளாக சேர்க்கின்றன.

                                                                          
          பின்னர் எப்போதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே வரிசை ஏற்படும் போது, மூளை செல்கள் ஏற்கனவே அந்த அலைவரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும், அப்படி விரித்துக் காட்டும் போது அதை அனுபவிப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் அனுபவங்களால் ஏற்படும் அலைகளும்  கருமையத்திற்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன. #ருமையம்#

          இப்பதிவுகள் ஆன்மா உயிர் பொருளாக விளைந்த காலம் தொட்டு   தொடரந்து ஏற்பட்ட அனுபவங்கள், எண்ணங்கள், பல்வேறு பிறவிகளில் தொகுத்த விடயங்கள் முழுமையும் கருமையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். 

          நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம், உள்ளம், சொல், செயல் போன்றவற்றில் ஒருமை இல்லாமை, மறைமுகமாய், நேர்முகமாய் பிறர் மனம் வருந்தச் செய்தல், மற்றவர்களின் உயிர் சுதந்திரமும் , வாழ்வின் வளமும் பறித்தல். பொறாமை, கடும்பற்று, சினம், முறையற்ற பால் கவர்ச்சி, ஏற்ற தாழ்வு எண்ணம் ஆகியவை கருமையத்தை களங்கப்படுத்தும்  காரணிகள்.

          கருமைய பதிவுகள் களங்கப்பட்டால், என்னவாகும்.-?  
தற்போது நடக்கும் பிறவியில்  களங்கப்பட்ட பதிவுகள் மீண்டும் சொல்லாகவும், செயலாகவும், எண்ணங்களாகவும் விரிந்து அதற்கேற்ப நிகழ்கால விளைவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திச் செல்லும்.. கருமைய பதிவின் தரத்திற்கேற்ப நல்லவையாகவோ, கெட்டவைகளாகவே  வாழ்வில் சம்பவங்கள் நடக்கின்றன.

         "நன்மையும், தீமையும் பிறன் செய்ய வாரா.''   என்பதற்கேற்ப நாம் நமது விதியை பொறுமையாக பல்வேறு பிறவிகளில் கட்டமைக்கப்பட்டு நாமே அவற்றை ஏற்று அனுபவிக்க தயாராகி வந்திருக்கிறோம். உண்மையில் கருமைய பதிவை வேறு யாரும் அங்கே பதிவிட்டு விடவில்லை. நன்மை நடந்தால் மகிழ்வதும், தீமை நடந்தால் துக்கம் அடைவதும், அறியாமை அன்றி வேறில்லை.

             கேது எதையும் சுருக்குல் என்பதற்கு காரக கிரகம். கருமையம் என்பது கேதுவின் அம்சம் பல்வேறு பிறவிகளின் பதிவுகளை சூட்சமமாக சுருக்கி தன்னகத்தே வைத்திருக்கும் நிலை.  சூட்சும நிலையில் உள்ள கர்ம பதிவுகளை எடுத்து செயலுக்கு கொண்டு வரும் காரகத்துவ கிரகம். ஒருவருடைய ஜாதகத்தில் கேது எந்த கிரகத்துடன் தொடர்பு உள்ளது என்பதின் மூலம் கருமையத்தின் கர்ம பதிவை தெரிந்து கொள்ள முடியும்.

              கேது+சூரியன் எனில் தந்தையை போன பிறவியில் சரியாக கவனிக்கத் தவறியதை குறிக்கும். எனவே அவர் வழியில் சாதகமின்மை.
              கேது+ சந்திரன் எனில் தாயை  சரியாக கவனிக்கத் தவறிவிட்டதன் விளைவு.   அவரின் வழியில் கஷ்டங்கள்.  
                கேது+செவ்வாய். எனில் சகோதரனை ஏமாற்றிய கர்மா.
               கேது+புதன் மாமன் வழியில், நண்பர்கள் வழியில், காதலின் வழியில், நிலம் சம்பந்த வழியில் செய்த கர்மாவை குறிக்கும்,
                 கேது+குரு எனில் குழந்தை வழியில், போன பிறவியில் கடன் வாங்கி அதை தராமல் ஏமாற்றியது, குழந்தைகளை சரியாக பராமரிக்காதது,
                  கேது+சுக்கிரன் எனில் மனைவி வழி கர்மா. மனைவியை சரியாக நடத்தாதது, அவரின் உறவுகளுடன் பகை, அவரின் செல்வங்களை அபகரித்தது போன்ற சம்பந்தப்பட்ட கர்மா.
                   கேது+சனி எனில் குல தெய்வத்தை வணங்காது இருத்தல், குல தெய்வ வழியில் ஏமாற்றுதல், பூர்வீக சொத்தை அபகரித்தல், மூத்த சகோதரனை ஏமாற்றுதல், தொழிலை அபகரித்தல்.
                    
                     மேற்கண்டவை ஊழ்வினையாக, கர்மாவாக பின்தொடரும். கேது எந்த பாவத்தில் அல்லது எந்த கிரகத்துடன் தொடர்பு பெறுகிறதோ அதன் வழி நெருக்கடி இருக்கும். அந்த காரக கிரகம் காட்டும் நபர்கள் மேல் சிலசமயம் அளவுகடந்த பாசம் வரும் அதுவே பிரச்சனையாக வந்து நிற்கும். எனவே கேது இணைவு காரக நபர்களின் விடயத்தில் நம் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. சன்னியாசி எப்படி பட்டும் படாமல் வாழ்க்கை நடத்துகிறரோ அது போல் அந்த காரக நபர்களுடன் நம் உறவு இருக்க வேண்டும். இதுவே பரிகாரம். ஏன் எனில் கேது ஒரு சன்னியாசி     


கருஞ்சக்தி விரிவு (ராகு) 


                    Dark energy என்ற கருப்பு ஆற்றல் என்பது இன்றளவும் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் ஒருவித ஆற்றல், இதைப்பற்ற் இன்றும்  பல ஆய்வுகள் உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது. எனினும் இதைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் ஓரளவு இதை பற்றி யூகிக்க முடிகிறது. மற்ற அண்டப் பொருள்களின் மேல் அது ஏற்படுத்தும் தாக்கத்தை கொண்டு அதை அனுமானிக்க முடிகிறது. இந்த அண்டம் முழுவதும் நிறைந்துள்ள இது அண்டம் விரிவடைய முக்கிய பங்காற்றுகிறது என்பதை கண்டறிந்துள்ளார்கள்,
    
                          
                    இது அண்டம் உருவாக காரணமான பெருவெடிப்பு (Big Bang} நிகழ்வின் போது தோன்றியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து, திருமூலர்  தம் பாடல் வரிகளில் இதைக் குறிப்பிடுகிறார்.

                                   " இல்லது சக்தி இடந்தனில் உண்டாகிக்
                                       கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
                                       வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
                                        சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே"

                                              #திருமந்திரம்#

                     பிண்டமாகிய உடலில் மூலம், எண்ணங்கள், ஆற்றும் செயல்கள் யாவும் அலைகளாக கருமையத்தில் பதிவது போல " அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என்ற வழக்கிற்கு ஏற்ப தூல பஞ்பூதங்கள்  காட்சிக்கு கிடைக்கிறது. பிண்டமாகிய உடலில் பஞ்ச பூத தன்மைகள் சுவை, ஊறு. ஒளி. ஓசை, மணம், கடைசியாக மனமாகவும் தன்மாத்திரை அடைந்து செயல்படுகிறது, உடலில்  இயங்கும் கருமைய பதிவு ஒவ்வொரு விநாடி அளவில் நடக்கும் விடங்களை பதிவு செய்வது போல  பேரண்டத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் வான் காந்தப் பேரேட்டில் பதியப் படுகிறது.

                      பண்டைய இந்து மதக் கோட்பாடின்படி புராதன வேதங்கள் வான் காந்தப் பேரேட்டிலிருந்து  ரிசி முனிவர்களால் சந்தஸ் என்ற சப்த ரூபங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.  உண்மையில் யாரும் அதை எழுதவில்லை. பரம்பொருளின் அனுமதியின்றி அவற்றை யாராலும் கிரகிக்க முடியாது. அநாதி காலம் தொட்டு பிரபஞ்சப் பேரேட்டில் அனைத்தும் பதிவிடப்பட்டு வந்திருக்கிறது. அது ஆதியந்தம் இல்லாதது.

                          இந்த விரிவின் காரகத்துவம் என்பது ராகு. ஒளியற்ற இருள் நிலை உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத ரகசியம் அது. பிண்டமாகிய உடலில் செயல்படும் கிரக அமைப்பு. கரு மைய பதிவுகளை தகுந்த காலத்தில் எடுத்து விரித்து செயல்படுத்தும் அமைப்பு. அது எந்த கிரகத்துடன் தொடர்பு கொள்கிறதோ அவற்றை விரித்து பிரம்மாண்டப் படுத்தும் .  இருள்நிலை என்பதால் அது விரித்துக் காட்டும் காரக , பாவ அமைப்புகளில் எதிர்மறையான விடயங்களையே அதிகமாக நடத்திச் செல்லும்.

                             ஒளியுள்ள கிரகங்களின் ஒளி வீச்சு, அல்லது அதன் பார்வை இருந்தாலன்றி  ராகுவின் இருள் நிலை நன்மை செய்வதில்லை.

                                           ராகு+ சூரியன் எனில் அதிகாரத்துடன் கூடிய ஆணவம், துணிந்து செயல்படுதல், 
                                           ராகு+சந்திரன் எதிர்மறையான மனநிலை, நடக்க முடியாதவற்றை தியானம் போல் சிந்தித்த வாழ்வது.
                                            ராகு+ செவ்வாய்  பகைவர்களை அதிகமாக தானே தேடிக் கொள்வது, ஒர இறுக்கமான மனநிலையில் வாழ்வது
                                             ராகு+சுக்கிரன் பெண்கள் விடயத்தில் பிரச்சனைகள், நண்பர்களால் ஏமாற்றப்படுவது
                                             ராகு+புதன் மந்திர தந்திர விடயங்களில் ஆர்வம்.
                                              ராகு+குரு  ஆன்மீகத்தில் ஆர்வமின்மை. நாத்திக மனம்.சம்பர்தாயங்களை இகழ்வது.
                                                ராகு+சனி பிறர் உழைப்பை சுரண்டுவது முறையற்ற வழிகளில் பொருள் சேர்க்கை


                                               மேற்கண்டவற்றில் ராகு எந்த கிரகங்களை அல்லது பாவகங்களை தொடர்பு கொள்கிறதோ அது சம்பந்தமான விடயங்களில் கவனம் தேவை, முறையற்ற அல்லது சட்டத்திற்கு புரம்பான வழிகளில்அகல கால் வைத்து மாட்டிக்க கொள்ளும் தன்மை அதிகம் ஏற்படும்.  


அன்புடன்
சந்திர ஆதித்யன்.       
       







































1

              

          

கருத்துரையிடுக

0 கருத்துகள்