Hot Posts

6/recent/ticker-posts

மணி ஓசையின் மகத்துவம்

                                                                                                                                                                                                                                                                                                                                                                            தில்லையின் சிகண்டி பூர்ணம் என்ற மணி             


               மணி ஓசையின் மகத்துவத்தை அறிய வேண்டும்  என்றால் முதலில் ஒலிக்கும், ஓசைக்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டும். ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தால், ஓசை உணர்த்தும் உண்மையை அறியலாம். ஓசை உணர்த்தும் உண்மையை செவிமடுத்தால் அது சூட்சமமாக பல அதிர்வு அலைகளாக பிரிந்து நின்று ஒன்றை சுட்டுவதை அறியலாம், பலவாய் பிரிந்து நின்ற ஆதார ஒலியை உணர்ந்து கொண்டால் அது ஒளியாக பரிணமிக்கும் அழகை அறிந்து கொள்ளலாம்.


                                                                  



          நாதம் என்ற பல அதிர்வு எண் கொண்ட ஒலி,  ஒளியாக மாறும் நிலையை நாதாந்த ஒளி நிலை, இத்தகைய ஒலி,ஒளி ரகசியத்தை புலப்படுத்தும் திருத்தலமே தில்லையம்பல நாதர் உறையும் சிதம்பர திருத்தலம். தவிர அண்ணாமலையில் ஆக்கோட்டை லிங்கம், மதுரை அருகே திடியன் மலை, திருச்சி அருகே துவரங்குறிச்சியில்  ஒலியுலா சுவாமிகளின் ஜீவ சமாதி, வடலூர் வள்ளலாரின் ஆலயம் ஆகியவை ஒலி, ஒளியான சூட்சமத்தை அறிவிக்கும் தலங்களாகும்.

           ஒலிக்கும் ஒளிக்கும் என்ன வேறுபாடு,,-.? ஒலி என்னும் சொல் ஒரு பொருளிலிருந்து எழும் எல்லாவித சப்தத்தையும் குறிக்கும். ஆனால் ஓசை என்பது முறைப்படுத்தப்பட், தூய்மைப்படுத்தப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட நெறிபடுத்தப்பட்ட ஒலியாகும். இதை நாம் நாதம், சங்கீதம், இசை என்கிறோம். மணி ஓசை வேத சக்தி நிறைந்த ஓசையை பரப்பும் தன்மையால்தான் எல்லா மத வழிபாடுகளிலும் மணி ஓசைக்கு பிரதான இடம் வழங்கப்படுகிறது. மணி ஓசையை கூர்ந்து கேட்டு ஆத்ம விசாரம் செய்தால் அது ஒரு தியான நிலைக்கு அழைத்துப் போகும். அதன் மூலம் எளிதில் தங்களை இறை நிலைக்கு உயர்த்திக் கொள்முடியும்.


ஆலய மணியின் தனிச்சிறப்பு.

 

                 மூர்த்தி, தீர்த்தம், தலம் என ஒவ்வொரு திருத்தலத்திற்கும் உரிய சிறப்பு அம்சங்கள் உண்டு, இவ்வாறு ஒரு திருத்தலத்தில் உள்ள தல விருட்சம், கொடி மரம், வாகனங்கள் போன்றவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு அத்தல ஆலயமணிக்கு உண்டு #bell#

                ஆலயத்தில் எழுந்தருளிய எம்பிரானாகிய சிவனை , அனுதினமும்  காண முடியாத நிலையில் அந்த ஆலயத்தில் எழும்பி வரும் காண்ட மணியின் ஓசையிலே, சிவ சிந்தனையில் லயித்து தெய்வீக அற்புதத்தை நந்தனார் நிறைவேற்றும் அளவிற்கு அவர் பக்தியை வளர்க்க பேருதவி புரிந்ததே சிதம்பர ஆலயமணியான சிகண்டி பூர்ணம் என்னும் மணி ஆகும்.

                 பஞ்ச பூதங்களைக் கடந்து கால தேசத்தைக் கடந்து செல்லும் போது தான் இறை பக்தி கனியும். இவ்வாற. கால பரிமாணத்தைக் கடக்கும் ஆற்றலை அளிக்கவல்லதே சிவாவின் நாட்டிய ஒலியுடன் இணைந்த சிகண்டி பூர்ணம் மணி ஓசையாகும்.

                அதே போல் காலத்தை விரயம் செய்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வழிகாட்டுவதும் இத்தலத்தில் உள்ள மணியாகும். நடராஜ சன்னதிக்கு அடுத்த பிரகாரத்தில் அமைந்துள்ள நிருத்த கண்டா என்னும் ஆலய மணிஇதுவரை காலத்தை விரயம் செய்த குற்றத்தைக் களையும் மார்கத்தையிம் இனி காலத்தை முறையாக பயன்படுத்தும் நெறிமுறைகளையும் உணர்த்தவல்லது.  

நன்றி

அன்புடன்

சந்திர ஆதித்யன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்