இப்புவியில் உள்ள அனைத்திலும் இருவித சக்திகளும் அடங்கியுள்ளன. உதாரணமாக வெப்பம் என்றால் அதற்கு எதிர்நிலை என்பது குளிர்ச்சி. வெளிச்சம் அதன் எதிர்நிலை இருள். அக்குபஞ்சரில் உள்ள இன் யாங் தத்துவம் என்பது சீன தேசத்தில் உருவான தாவோயிசத்தில் காணப்படுவதாகும் தாவோ என்றால் பாதை என்று பொருள். அதாவது முழுமைக்கான பாதை , முழுமை என்பது எதிர்.,எதிர் தன்மைகளின் இயக்கமே இசைவே முழுமை என்கிறது தாவோயிசம். இத்தகைய சக்திகள் ஒன்று அதிகமாகவும் மற்ற சக்தி குறைவாகவும் மாறி, மாறி அமைந்திருக்கிறது, பிரபஞ்சத்தில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படுவது போல எல்லாமே மாறி மாறித்தான் இயற்கைச் சக்திகள் இயங்சிக் கொண்டிருக்கின்றன,
ஐ..சிங் ஆருடத்தில் அழகான மனைவி அமைவாரா?
ஐ..சிங் எனும் சீன ஆருடம் மிகவும் அற்புதமான ஒரு கலையாகும். எதிர்காலத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது. தற்சமயம் என்ன செய்யலாம் என்பதற்கும், பிரச்சனைகளுக்கும் பார்க்கலாம். ஒரு தொழில் ஆரம்பிக்கவோ, வியாபாரம் ஆரம்பிக்கவோ, பதவி கிடைக்குமா என பார்க்கவும், திருமணம் மற்றும் வரப்போகும் கணவன்/மனைவி எப்படிபட்டவர் போன்றவற்றை அறிய இந்த ஆரூடத்தைப் பயன்படுத்த முடியும்.
இதில் 64 விதமான Hexagram என்ற குறியீடுகள் விளக்கப்பட்டுள்ளன. இவை பிரபஞ்ச சக்திகளில் ஏற்படும் மாறுதல்களையும் தன்மைகளையும் குறிக்கிறது. உடைந்த கோடு ---- ---- யின் என்றும், உடையாத கோடு ------------- யாங் என்றும் இரு வித கோடுகள் பயன்படுத்தப்படுகிறது.
உடைந்த கோடு எதிர்மறையானதாகும், உடையாத கோடு உறுதியான தன்மை உடையது நேர்மறையானது. யாங் சக்தியை ஆண் என்றும் யின் சக்தியை பெண் என்றும் அழைக்கிறார்கள். பல கோடுகள் சேர்ந்து 6 கோட்டுப் பிரிவாக அமைகிறது. இவை சேர்ந்து ஒரு I-ching ( TRIGRAM) அமைகிறது,
இந்த டிரைகிராம் அமைக்க பகடை காய்கள் பயன்படுகிறது. இதில் 6 பக்கங்களிலும் புள்ளிகள் ஒன்று முதல் ஆறு வரை பக்கத்துக்கு ஒரு எண்ணை புள்ளிகளில் குறித்திருப்பார்கள். பகடைகளை 6 முறை குலுக்கிப் போட்டு வரக்கூடிய எண்ணுக்கு உரிய கோடுகள் வரைய 6 கோடுகள் என்ற(HEXAGRAM) கிடைக்கும்.
இதில் மொத்தமாக 64 HEXAGRAM வகைப்படுத்தப்பட்டுள்ளன. சி இன் என்ற ஆக்கும் சக்தியில் ஆரம்பித்து " வெய்ச்சீ " என்ற 64 வரை உள்ளன. யிங் மற்றும் யாங் ஆகியவை பல கூட்டு கலவைகளில் பல வரைபடத்தை உருவாக்குகின்றன. அவை அதற்கு தகுந்தாற் போல பலனை சொல்லிச் செல்கின்றன. உதாரணமாக எக்சாகிராம் 5 என்ற வரைபடத்தை கட்டமைத்தால் பலன் எதையும் செய்யாமல் அமைதியாக காத்திருக்க வேண்டிய காலகட்டம் எனப் பொருள்.
எக்சாகிராம் 6 என்ற வரைபடத்தை அமைக்குமானால் அது" சாங் " சாங் என்றால் பிரச்சனை என்று பொருள், இது ஒரு அசுபமான வரைபடம் வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலில், வேலைகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம் இது.
எக்சாகிராம் 14 டோங் ரென் என்ற வரைபடத்தை அமைக்குமானால் அது மாபெரும் அதிஷ்டமான காலகட்டத்தை குறிக்கும். வாழ்க்கையில் நல்ல திருப்பு முனை வந்திருக்கிறது. திருமணம் கைகூடும் வரும் மனைவி அல்லது கணவர் நல்ல கவர்ச்சிகரமானவராக, மனதிற்குப் பிடித்த தன்மையில் அமைவார். குடும்பத்தில் பல சுப காரியங்கள் நடைபெறும்.
புராதன சீனவில் கடைபிடிக்கப்பட்டு இன்றளவும் உயிர்பில் இருக்கும் கலையாகும்.
நன்றி
அன்புடன்
சந்திர ஆதித்யன்
0 கருத்துகள்