Hot Posts

6/recent/ticker-posts

வாழ்வில் செல்வ நிலையை உயர்த்துவது எப்படி பாகம் 1

           வாழ்வில் செல்வத்தை அடைவதற்கும், வருமானத்தை பெருக்குவதற்கும், பல சூட்சும வழிகள் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் பொதுவாக காணும் அம்சம் என்னவென்றால்  தனத்திற்கு அதிபதியான குரு எப்படி அமைந்துள்ளார் என்பதை பொருத்து அவரின் தன நிலை அல்லது பொருளாதார நிலைகளை அறிந்து கொள்ள முடியும். வலுவான நிலையில் குரு ஜாதகத்தில் அமைந்தால் அது ஒரு நல்ல அறிகுறி செல்வ வலிமையை பெற அது வழி நடத்தும். அதே சமயம் சுக்கிரன் நிலையும் செல்வ நிலையை குறிகாட்டும் காரணியாக அமையும்.                                                      


                                                                               
          அதே சமயம் இரண்டாம் பாவம் என்பது பாதிக்கப்படாமல் தீய கிரகங்களின் பார்வை அல்லது சாரம் பெறாமல் , சுப கிரகங்களின் அமைவு அல்லது பார்வை , அல்லது சுப கிரங்களின் சாரம் பெறுவதும் ஒருவரின் செல்வம் , வருமானம் , சம்பந்தமான நிலைகளுக்கு நல்ல அமைப்பாக கருதப்படும்.

              இரண்டாம் வீட்டின் திரி கோண பாவங்களான 6 மற்றும் 10 ம் வீடுகள் பலம் பெற்றாலும் வேலை, அல்லது தொழில் மூலம் வருமானத்தை தரும். இதை தாண்டி 11ம் பாவமான லாபம், சுய திருப்தி, போன்ற இடத்தில்  மேற்கண்ட திரி கோண Trilimb பாவங்களின் கிரகம் அமைவதும் நன்மை செய்யக்கூடிய அமைப்பு எனலாம்.

                ஐந்தாம் பாவம் படைப்பாற்றல் மற்றும் ஊகங்களின் மூலம் நிதி வாய்ப்புகளுடன் தொடர்புடையது, அதே நேரத்தில் எட்டாவது பாவம் திடீர்ரென்று  அதிர்ஷ்டம் காரணமாக வரும் செல்வ நிலையை குறிப்பது. இந்த பாவங்களில் கிரகங்கள் சாதகமாக இருக்கும் போது நீங்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள்.

                  சரி இதெல்லாம் மிகவும் சரிதான் ஆனால்  மேற்கண்ட அமைப்பு போல்  இல்லாமல் ஜோதிட ரீதியாக அனுகூலமான ஜாதகத்துடன் ஆசீர்பதிக்கப்படாத பல நபர்கள் உள்ளனர். அவர்களின் செல்வ நிலையை உயர்த்த முடியாதா..?  என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.  கவலை வேண்டாம் சில பயனுள்ள சூட்சுமமான வழிகள் பணத்தை    ஈர்ப்பதற்கு உண்டு.

                     விதி பணத்தை ஈர்ப்பதற்கு எதிர்நிலையாக இருந்தாலும், மதி என்ற அறிவின் மூலமாக சூட்சுமமான வழிகளில் பணத்தை ஈர்ப்பதற்கு ஜாதகம் தடை செய்வதில்லை. சில கர்மாக்களுக்கு எந்த பரிகாரமும் வேலை செய்யாது.  உள்ளது உள்ளபடியே அனுபவித்து கடக்கத்தான் வேண்டும். ஆனால் வருமானம், செல்வம், பண வரவு போன்றவற்றில் ஏற்படும் தடைகளை சில வகையான பரிகாரத்தின் மூலம் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும்.

                         பணம் வருவதற்கும், போவதற்கும், சாதகமான அம்சத்துடன் நடை பெற வேண்டும். சாதகம் (வரவு)  வருமானம் சாதகமாக இருந்து செலவு (பாதகமாக) இருந்தாலும் பயன் இல்லை.  வருமானத்தின் செலவு பல ரூபங்களில் பிரயோஜனமில்லாமல் செலவு ஏற்பட்டுக் கொண்டு இருக்கும். இந்த விரயத் செலவுகளை நடக்காமல் தடுத்தாலே ஒருவரின் செல்வ வலிமை பலம் பெறும். சரியான வழியில் வரவும், செலவும் நடைபெற வேண்டும் என்பதற்காக சித்தர்கள் அருளிய காப்பு மந்திரம் ஒன்று உண்டு. 

                          ஒருவரிடமிருந்து ஏதோ ஒரு காரணத்துக்காக பணம் பெறுகிறீர்கள், அது ஊதியமாகவோ, அல்லது கடனாகவோ, அல்லது வியாபாரத்தில் கிடைக்கும் பணமாகவோ ஏதோ ஒரு வழியில் பெறுகிறீர்கள் எனும் போது  செல்வ காப்பு மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்தபின் வாங்க வேண்டும். இது திருக்குறள் அளவுக்கு சின்ன வரிகளுடைய மந்திரமாகும்.

                         அதே போல் பணத்தை செலவு செய்யும் போது அது எந்த செலவாக இருக்கட்டும், பணத்தை யாரிடம் கொடுக்கும் போதும் இந்த காப்பு மந்திரத்தை உச்சரித்து (மனதிற்குள்) தர வேண்டும். இப்படி செய்து வரும்போது படிப்படியாக பணம் வரும் வழிகளில் உங்கள் கர்மாவினால் தடை செய்யப்பட்ட பணத் தடை தகர்த்து வரத் துவங்கும். எந்த சூட்சம கர்மா அந்த பணத்தை தடை செய்ததோ அது படிப்படியாக விலகும்.

                          தீய கர்மா கறை இன்றி பணம் வரத்துவங்குவதால் அதன் செலவும் அதாவது உங்களுக்கு அவசியமான செலவாகவும், பயன் உள்ளதாகவும் அமையத் துவங்கும். வீண் விரயங்கள், எதிர்பாராத இழப்புகளால் பாடுபட்டு  சேர்த்த பணம் விரயமாகாமல் காக்கபபடும்.

                       எந்த மூல  மந்திரமும் வெறுமனே உச்சரிப்பதால் அவை சக்தி பெறுவதில்லை, அவற்றை உச்சாடனம் செய்து உங்களுக்குள் சக்தி ஏற்றிக் கொண்டு பிறகு பயன்படுத்துவதால் மிகுந்த சக்திமிக்க வழிபாடாக மாறும். 

                       உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு ஆலயத்தில் அம்மாவாசை, அல்லது பௌர்ணமி, பிரதோஷ காலம், விஷ்ணுபதி புண்ணிய காலங்களில் ஒரு இடத்தில் அமர்ந்து குறைந்தபட்சம்  ஆயிரம் முறையாவது ஜெபித்து உருவேற்றிக் கொள்ள வேண்டும். நதிக்கரைகள், அல்லது மலைகளில்  மேல்  அமர்ந்து ஜெபித்து உருவேற்றிக் கொள்ளலாம். சந்திர, சூரிய கிரகண காலங்களும் இதற்கு சிறப்பானவை. கிரிவலம் அமைந்துள்ள ஆலயங்களில் கிரிவலம் வந்தபடியே ஜெபிப்பதும் அதிக சக்தியேற்றத்தை தரும்.


               மூலமந்திரம்                                  

                               திருமகள் திருக்கையில் திருப்பாத திருப்பதமே திருகட

                                திருவுள  திருத் திருவே திருக்காப்பு,

                                 ஈசசித்தர்

                       மேற்கண்ட நிலைகள் முதலில் செல்வத்தை விரயமாகமலும், பயன் உள்ள வழியில் அடைவதற்கும், செலவு செய்வதற்கும் பாதுகாப்பான வழிகளாகும்.. இதோடு மட்டுமில்லாமல் அடுத்த படிநிலைகளாக தாந்தீரிக வழிகளில் சக்தியேற்றம் செய்வது எப்படி என்பதை அடுத்த பதிவில் காண்போம். 

நன்றி.

அன்புடன்

சந்திரஆதித்யன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்