அபிஜித் என்ற அரிய நட்சத்திர வழிபாடு.
செல்வம் பெருக, வீட்டில் லட்சுமி கடாட்சம் செழிக்க அதன் மூலம் பண வரவு உண்டாக என்ன செய்யலாம்-? கை நிறைய சம்பாதித்தாலும் கையில் காசு தங்கலையே என இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றனர். செலவுகள் அதிகம் ஏற்படுகிறது, பணத்தைச் சேமிக்க முடியவில்லையே என வருந்துகின்றனர். பணக்காரன் ஆக வேண்டும் எனில் உண்மையில் அநாவசிய, தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துப் பழகிக் கொண்டாலே போதும், செல்வத்தின் வளத்தின் முதல் படியில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் என அர்த்தம்.
முதலில் ஒரு எளிய பரிகாரத்தை சொல்கிறேன். சித்தர்களின் வழிபாடுகளில் முதலில் இடம் பிடிப்பது திருவிளக்கு ஒளியின் வழிபாடுதான். கற்ப ஜோதியில் ஐக்கிய சொருபமான இறைவனை வீட்டில் எழுதருள செய்ய வேண்டும் எனில் எந்த உருவச் சிலை வழிபாடுகளையும் விட ஜோதி வழிபாடுதான் சிறந்தது. விரதமிருந்து சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு நிறைவாக அவர்களது பக்தியை ஏற்று பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்து விரதத்தை இறைவன் பூர்த்தி செய்கிறார். எந்த இடம் ஆனாலும் இறைவனை பிரத்யச்சனமாக எழுந்தருளச் செய்வது ஜோதியே இன்றி வேறு எதுவும் இல்லை.
ஏரோதுகளின் தலைவன் மோசேவிடம் தனது 10 கட்டளைகளை கடவுள் சினாய் மலையில் ஒப்படைத்த போதும் அவருக்கு நெருப்பு பிழம்பாகத்தான் காட்சி தந்தார். வள்ளலார் முதல் ஷீர்டி பாபா, இமயமலையில் தியானம் புரியும் யோகிகள், என பல யோகிகளும், ஜோதியை ஏற்றி அதன் அருளில் தங்களது ஆன்மீக சாதனைகளைப் வளர்த்துக் கொண்டவர்கள் தான்.
எனவே வீட்டில் விடியகாலையில் 4,30 மணி முதல் 6,00 மணிக்குள்ளும் மாலையில் அதே நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். இது எளிமையான ஆனால் சக்தி மிகுந்த பரிகாரம். ஏனெனில் ஜோதிடத்தில் கூட கணக்கீட்டிற்கு இது வரை வராத அபிஜித் என்ற புனித நட்சத்திரத்தின் கதிர் அலைகள் ஜோதியிலிருந்து வெளிப்படும் நேரம் இதுதான். இது 28வது நட்சத்திரம் என்று சில விடயங்களுக்கு இதை வைத்து கணிப்பார்கள். உத்திராட நட்சத்திரத்தின் கடைசி பாதமும் திருவோண நட்சத்திரத்தின் முதல் பாதமும் சேர்ந்து அபிஜித் நட்சத்திரமாகும். கேட்ட வரத்தை தரும் இந்த நட்சத்திர தேவதை அபிஜித் நட்சத்திர தேவி.
துவாபர யுகத்தில் இந்த புனித நட்சத்திரத்தின் சக்தியை தவறாக பயன்படுத்த நினைத்த துரியோதனின் முயற்சி பகவான் கிருஷ்ணரால் தடுக்கப்பட்டது. இதன் தரிசனம் செய்தவர் எது கேட்டாலும் கொடுத்துவிடும் தன்மை உள்ளதால், கலியுகத்தில் இதை தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்று பகவான் கிருஷ்ணரால் அபிஜித் நட்சத்திர தரிசனம் வானிலிருந்து மறைக்கப்பட்டது. பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான திரு கண்ணபுரத்தில் தன் சிரசில் ஒரு புஷ்பம் போல் சூடிக்கொண்டு அதை வானிலிருந்து மறைத்தார்Abijit#
ஆகையால் திருகண்ணபுரம் கோவிலை எப்படி சுற்றி வலம் வந்தாலும் மூல விமானத்தை பார்க்க முடியாது, இந்த பூவுலகித்தில் பெருமாள் கோவிலில் மூலக்கருவறை விமானம் கண்களுக்குத் தென்படாத ஒரே ஆலயம் திருகண்ணபுரம் கிருஷ்ணன் கோவில் மட்டுமே. எனினும் திருகண்ணபுரம் கோவிலில் வழிபாடு செய்யும் போது கிருஷ்ணரின் சிரசில் அபிஜித் நட்சத்திரம் தெரிவதாக மானசீகமாக நினைத்து வழிபட்டால் அபிஜித் நட்சத்திரத்தை நேரடியாக தரிசித்த பலன் கிடைக்கும்.
வீட்டிலிருந்தபடிக்கு அதன் சாரத்தை வீட்டில் பரவச் செய்ய முடியும் அது எப்படி எனில்.
அபிஜித்தின் அலைகள் புனிதத்துவம் வாய்ந்தவை அதிகாலையில் ஏற்றப்படும் ஜோதி மூலம் தங்களது கதிர்களை பரிமாற்றம் செய்து வெளி எங்கும் பரப்புகின்றன. உண்மையில் பிரம்ம முகூர்த்த நேரமான விடியற் காலை 3,30 மணிக்கு இந்த நேரம் துவங்கிவிடும். இதை கருத்தில் வைத்துதான் பிரம்மமுகூர்த்த நேரத்தை புனிதமானது என்று தொன்று தொட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே விளக்கேற்றுவதை ஏதோ ஒரு 10 நாட்கள் ஏற்றி வந்து பலனை உடனடியாக எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ச்சியாக இப் பழக்கத்தை கை கொண்டால் படிப்படியாக செல்வச் செழிப்பு அந்த இல்லத்தில் வளர்வதை கண்கூடாக காணலாம்.
விதி என்று நினைத்து வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை நம் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அது கஷ்டத்திற்கான தீர்வு என்ன..? என்பதை தேடுபவர்களுக்கு அதிர்ஷ்டமானது நிச்சயம் கை கொடுக்கும். பெரிய, பெரிய கஷ்டங்களை தீர்த்து வைக்கும் அதிர்ஷ்டமிகுந்த இறை சக்திகளை நாம் எப்படி நம் அருகிலேயே வைத்துக் கொள்வது...? அதற்கான சூட்சுமமான விடயங்களை இப்பதிவில் காணலாம்.
கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் இந்த அதிர்ஷ்ட சக்திகளை நம் வீட்டின்பக்கம் பார்க்க வைப்பது. நம் வீட்டில் வாசனை மிக்க பொருட்கள், வாசனை தூபங்கள் போன்றவற்றை வைக்கும் போது நிச்சயம் இந்த இறை சக்திகளை நம்மால் ஈர்க்க முடியும். வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் மங்கள சக்தி கிரணங்கள் வீட்டில் பரவ துவங்கும். அதனுடன் வாசனை மிகுந்த பொருட்களை வீட்டில் வைத்துக் கொள்வது மிகுந்த சக்தி மிக்க வழிபாடக மாறிவிடும்.
காலை, மாலை வேளையில் ஏற்றி வைத்திருக்கும் அந்த தீபத்துடன் வாசனை மிகுந்த தூபங்கள், அல்லது ஊதுபத்திகள் போன்றவற்றை ஏற்றி வைத்தால் நல்லது. வாசனை பொருட்களான கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற மூன்றையும் சேர்த்து பணப் பெட்டி அல்லது உங்கள் கைப்பை, அல்லது பர்ஸ் போன்றவற்றில் சிறிய அளவில் ஒரு தாளில் மடித்து வைத்துக் கொண்டால் அதிர்ஷ்ட சக்திகளை ஈர்க்கும் சக்தி கொண்டது.
வாசனை திரவியங்களை பயன்படுத்துவது இஸ்லாத்தில் மிகுவும் ஊக்குவிக்கப்படுகிறது. வாசனை திரவியங்கள், அல்லது சாம்பிராணி போன்ற வாசனை புகைகளை மக்கள் கூடும் கூட்டங்களுக்கு குறிப்பாக வெள்ளிக்கிழமை மசூதிக்கு செல்லும் போது பயன்படுத்துகிறார்கள்.
மேற்கண்ட வழிபாடுகள் ஸ்ரீதிருஷ்ணனின் பேரருளாலும் அபிஜித் நட்சத்திர தேவியின் கருணையாலும் செல்வ வளம் மட்டுமில்லாமல், நல்ல மனோசக்தி கிடைக்கும், பிறரால் அடிக்கடி வசைபட்டு வாழ் வோர் நன்னிலை பெறுவர், வாழ்வில் தீய பழக்கங்கள் அண்டாது.
மேலும் சில பதிவுகளை அடுத்து காணலாம்.
அன்புடன்
சந்திரஆதித்யன்.
0 கருத்துகள்