வேதை என்ற காயகற்பம் உலோகத்தின் மேல் அதை பயன்படுத்தும் போது அது தங்கமாகிறது. அதே முறையை மனிதர்கள் மேல் பயன்படுத்திய போது அது மனிதனை புத்தாக்கம் செய்கிறது. உடலை காயம் என்பார்கள் காயமாகிய உடல் மேல் செயல்படும் போது அது உடலை அழிவற்றதாக மாற்றுகிறது.. அதாவது கற்பமாக்குகிறது என்ற பொருளில் காயகற்பம் என அழைத்தார்கள்.
2014ல் எகிப்து பிரமீடுகளில் நடந்த ஆய்வில் 160 ஆழத்தில் ரசவாதம் செய்ய பயன்படுத்திய பொருட்களை கண்டறிந்தார்கள். அதனுடன் பல கிலோ எடையுள்ள சுத்தமான பாதரசமும் கிடைத்தது.கி.மு.1500ல் புராதன எகிப்தியர்களைச் சேர்ந்தது அது. கடவுளர்களை மகிழ்ச்சிப் படுத்தும் என்ற பொருளில் பாதரசத்தை "குய்க் சில்வர்”என்று பிற்காலத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்கள் அழைத்தனர்
திபெத்தியர்கள் பாதரசத்தை மட்டும் ரகசிய தீட்சை வழங்கப்பட்டது. அங்கு பிரதானமாக காயகற்பமும், தங்கமும் செய்வது எப்படி என கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை கற்றுக் கொண்டவர்கள் வெளியே வந்து தங்கம் செய்ய முயற்சி செய்யவில்லை. காரணம் உலகப் பொருட்களின் மேல் சிறிதும்கூட பற்று இல்லாதவர்களுக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டது.
இந்தியாவில் வாழ்ந்த யோகிகள்,சித்தர்கள்,சமணத்துறவிகள்,முஸ்லீம் ஞானிகள் ரசவாதத்தை அனாயசமாக செய்பவர்களாக இருந்தனர். மாசற்ற பண்பும்,ஒழுக்கசீலர்களாகவும் இருந்த இவர்களிடம் வேதையின் ரகசியங்கள் ஏராளமாக இருந்தது. #alchem#
அகஸ்தியர் நூற்றுஐம்பது முறைகளிலும் கோரக்கர் நூறு முறைகளிலும்,ராமதேவர் என்ற யாகோபு இருபத்தி நான்கு முறைகளிலும் தங்கம் செய்ய முடியும் என்று தங்களின் பாடல்களில் தெரிவித்திருக்கிறார்கள். மிகவும் எளிமையான பாடல்கள் போன்று பார்வைக்குத் தெரிந்தாலும் அதன் உண்மையான பொருள் வேறானது. ஒரு பொருளைப் பற்றி நேரடியாக சொல்லாமல் அதை வேறு ஒரு அர்தத்தில் வேறு ஒரு பெயரில் சொல்வார்கள். மறைபொருளாக குறிப்பிடப்படுவது “உலட்டாம்சி” எனப்படும்
தங்கம் செய்வது ஒருபுறம் இருந்தாலும் அதற்கு அடிப்படை ஒன்றாக இருப்பது முப்பு என்ற ரகசிய மருந்து. ஏனென்றால் இது வேறு எந்த மருத்துவத்திலும் கிடையாது.
சித்தர்களின் தனிப்பட்ட சிறப்பு இது. மனிதன் மரணமடையாமல் இருப்பது சாத்தியமா..? தலை முடி நரைக்காமல், உடல் பலவீனமடையாமல், தசைகள் தளர்வடையாமல், தோல் சுருங்காமல் இருக்க முடியுமா..? இப்படி ஒன்று கிடைப்பதாக இருந்தால் அது தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததுதானே. இளமை வேண்டுமா..? தங்கம் வேண்டுமா..? என்று கேள்வி எழுந்தால் வாலிப முறுக்கும், இளமை வனப்பும், பெருகி நிற்கும் பாலுணர்வு வீரியமும் ஒரு வயோதிகனுக்கு மீண்டும் கிடைப்பதாக இருந்தால் அதற்காக தங்கத்தைகூட வேண்டாம் என்றுதான் சொல்வார். எனென்றால் இளமை அத்தனை மகத்துவமானது.
முப்பு உலோகத்தின் மீது செயல்படும்போது அதை தங்கம் போல் உயர்ந்த மதிப்பு மிக்க உலோகமாக்கிறது, அதுவே உடலின் மீது செயல்படும்போது உடலை உன்னத இளமையாக்குகிறது.
சில அனுபவசாலிகளான மருத்துவ மேதைகளும், சித்த மருந்து மீது நம்பிக்கை அற்றவர்களும் சித்தர்களின் முப்புவை நம்புவதில்லை. அது அளப்பறிய காரியத்தை செய்யும் என்ற புரிதல் இல்லை ஏனென்றால் முப்புவை அவ்வளவு எளிதாக யாரும் தயாரிக்க முடியாத காரணத்தால் இந்த தவறான புரிதல்களுக்கு வழி வகுத்தது. ஆனாலும் தற்காலத்தில் அதை வெற்றிகரமாக தயாரித்து பயன்படுத்தியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நிறை குடம் தளும்பாது என்ற சொற்களுக்கு ஏற்ப வெற்றியடைந்தவர்கள் அதை வெளிப்படுத்துவதில்லை. எனவே சித்தர்கள் பாடியிருப்பது பொய்யல்ல. வைத்தியம், வாதம், யோகம், ஞானம் போன்ற நான்கு படிகளிலும் அறிவு அமையப் பெற்றவர்களான சித்தர்கள் தாங்கள் தயாரித்த முப்பு தவறானவர்களின் கைகளில் போய்விடக்கூடாது என்பதற்காக தயாரிப்பு முறையை பரிபாஷையில் எழுதி வைத்துச் சென்றார்கள்.
ரசவாதத்திற்கு அடிப்படை பொருளான முப்பு எந்த மருந்துடன் சேர்க்கப்பட்டாலும் அதன் வீரியத்தைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யும். உடலின் மீது செயல்பட்டு மரணமடையும் தருவாயில் இருப்பவரானாலும் நோயை குணப்படுத்தி வியக்கத்தக்க வகையில் விரைவில் குணமடைய வைக்கும்.
மேலைநாட்டு ரசவாதிகள் முப்புவின் அடிப்படைப் பொருட்களை பல பெயர்களில் அழைத்தார்கள். சித்தர்களைப் போலவே அவர்களும் அவற்றை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. விடுகதைகள் போன்ற பல்வேறு சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எலிஸ்சிர், ஞானிகளின் கல்,
சிவப்பு ஓயின், முட்டையின் கரு என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் இருக்கிறது. புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்து புகழ் பெற்ற ஐசக் நியூட்டன் முதல் கொண்டு எகிப்து புராதனப் பேரழகி கிளியோப்பாட்ரா வரை இதை தேடி அலைந்தவர்கள் பலர் அதில் வெற்றி பெற்றவர்கள் சிலரே. இந்த ரசவாதம் பற்றிய புதிய கண்ணோட்டத்தில் சில விஷயங்களை சுட்டிக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி,
அன்புடன்
சந்திர ஆதித்யன்
\
chandraadhithiyan@gmail.com
0 கருத்துகள்