பிரகாசமான மீன்
அஸ்வினி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் , இராசி சக்கரத்திலும் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம். மேட ராசியில் (ARIES) உள்ள மிகப்பிரகாசமான நட்சத்திரம். இதனுடைய அறிவியற் பெயர் "ஆல்பா ஏரிஸ்" மேற்கத்திய நாடுகளில் இதை "ஆமல்" (HAMAL ) என்பர்.
அஸ்வினி விண்மீனை தமிழில் இரலை, ஐப்பசி , யாழ்,ஏறு, புரவி, பரி, சென்னி என்ற சொற்களால் சூடாமணி நிகண்டுகள் சுட்டியுள்ளன. சூடாமணி இது அந்த மேட ராசியில் பீட்டா மற்றும் காமா விண்மீனுக்கு ஒப்பாகும். சோதிடத்தில் அஸ்வினியை கேது ஆள்கிறது.
கேது தலையில் பரிவட்ட கட்டுவதை, இரட்டையர்களை, மருத்துவ அறிஞர்களை, போன்றவற்றை குறிக்கும். கேதுவும், ராகுவும் இருள் கிரகங்கள் என்றாலும் அதன் நட்சத்திரம் மிகுந்த பிரகாசமானது. சூரியனைப் போல 4,5 மடங்கு கனமுள்ளது. இது பூமியிலிருந்து 65,9 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதால் இதன் ஒளி பொழிவு (apparent ,magnitids) 2.01 ஆகும். வானத்தில் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரங்களில் இது 47வது இடத்தை வகிக்கிறது.
கார்த்திகை நட்சத்திரங்களும் (pleides cluster) ,இதுவும் ஒரே நடுவரை விலக்கம் நடுவரை (declination) உடையவை
.
பழந்தமிழரின் வழக்கத்தில் அஸ்வினியை வைத்து மணி அறிதல்
இரவு நேர வானத்தில் துருவ மீனைப் போல அஸ்வினியை வைத்து மணி அறிந்து வந்தார்கள். வடமொழியில ஆரிய பட்டர் தனது குறிப்புகளில் இதை குறித்திருக்கிறார்., அஸ்வினி நட்சத்திரத்தை பற்றி மணி அறிதல் சம்பந்தமான பாடல்
அஸ்வினி அறுமீன் குதிரை தலை போல்
மெச்சிடும் கடகத்திரு கடிகைதாம்.
குதிரைத் தலை போல் இருக்கும் அச்சுவனி உச்சத்தில் வரும் போது கீழ்வானில் கடகராசி உதித்து இரண்டு நாழிகையாயிருக்கும் என்று பொருள்...உருவம் இன்றி நிழலாக செயல்படுவதால். உடலில் சூட்சமமாக செயல்படும் குண்டலினி சக்திக்கு இணையாக கேது கிரகத்தை ஒப்பிடலாம். அமைதியாக இருக்கும் அதன் தன்மைகள் வெளியே தெரியாது, ஒரு பாம்பு போல பதுங்கியிருக்கும். ஆனால் அது முதுகுதண்டில் எழுந்துவிட்டால் அது அளவிட முடியாத பேராற்றல் புரிய வரும்.
பேராற்றல் பெருகி நிற்கும்போது மணிபூரகம் ஏறிநின்றால் காமம் பெருக்கெடுத்து உடல் சீர் கெடும். கட்டுப்படுத்த தெரியாமல் பாம்பை கையாண்டால் அது கரத்தையே கொத்துவது போல குண்டலியை எழுப்ப மட்டுமல்லாமல், கட்டுபடுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். எத்தனையோ பேர் ஆன்மீக சாதனையில் ஈடுபடுப்போது அதீத காமத்தால் பெயரை கெடுத்துக் கொள்வது மட்டுமின்றி துறவு வாழ்க்கையிலிருந்து விலகி போயிருக்கறார்கள்.
கேது ஒரு கணித்தற்கு அரிய கடினமான கிரகம், ஒரு கையில் அனுபவ பாடத்தையும் மறு கையில் ஞான மார்கத்தையும் கொடுக்க தவறுதில்லை.
பழந்தமிழ் சோதிடத்தில் அஸ்வினி,
கூடலூர் கிழார் பாடிய புறநானுற்றுப் பாடலை சான்றாக்கலாம்., அதாவது மேட ராசிக்குள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் முதற்கால் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சந்திரன் இல்லாத பாதி இரவில், பங்குனி மாதத்தினுடைய முதற்பாதி அதாவது 15ம் நாள்
அனுசத்தின் வேர் நட்சத்திரமான கேட்டையும், புனர்பூசத்தின் கடை நட்சத்திரமான திருவாதிரையும் வானில் விளங்கிக் கொண்டிருக்கும் போது, தலைநாண் மீனாகிய உத்திரம், உச்சத்திலிருந்து கீழே இறங்க, நிலைநாண் மீனாகிய திருவாதிரை மேலே ஏற, தொன்நாண் மீனாகிய கேட்டை கடலுள் படிய, மேற்கண்ட நிலையில் ஒருமீன் கிழக்கும் வடக்கும் செல்லாமல் வானத்திருந்து பேரொளியுடன் கீழே விழுந்தது, அதையொட்டி அந்நாட்டு அரசனுக்கு தீங்கு வந்தது என கூடல் கிழார் சம்பவத்தை குறிப்பிடுகிறார் தொன்ம காலத்தில் பண்டை தமிழரின் சோதிட அறிவு வியக்க தக்கதாக உள்ளது..
அன்புடன்
சந்திர ஆதித்யன்
0 கருத்துகள்