முப்பு வகையில் மூன்று உள்ளது. அது வைத்திய முப்பு,வாத முப்பு,யோக முப்பு. முதல் இரண்டு முப்புக்களும் வைத்தியக் கலைச்சொற்கள். மூன்றாவது முப்பு குண்டலினி யோகத்தைக் குறிக்கிறது.அது எங்கும் தேடினாலும் கிடைக்காது. இது யோகத்தை குறிப்பதால் அது உங்களுக்கு உள்ளேயே வைத்து படைக்கப்பட்டுள்ளது.
உடல் என்ற பார்கடலை இடக்கலை, பிங்கலை,சுழிமுனை
என்ற மூன்றும் சேர்த்து தயாரிக்கப்பட்ட மத்தால் கடையும் போது முப்பு உச்சந்தலை என்ற
சகஸ்ராரத்திலிருந்து உற்பத்தியாகி ஆக்கினை
என்ற நெற்றிக்கண் வழியாக தொண்டைக்குள் இறங்கும் முப்பு இது.
அழியாத்தன்மை கொடுத்து உயரிய நிலையில் உடல் வள்ளலார் போல் ஒளி உடம்பாகும்/. பிரணவத்தேகம் என்பது இதைத்தான் குறிப்பிடுகிறார்கள். இதை சமாதி முப்பு என்றும் அழைக்கப்படும். ஒளி உடம்பிற்கு போகாமல் அதன் முந்திய நிலையில் இருந்து விடுவது. பல ஜீவசமாதிகளில் இருக்கும் யோகிகள் இந்நிலையில்தான் இருப்பார்கள். அவர்களின் உடலில் உயிர் குறி எதுவும் இருக்காது ஆனால் எந்த உறுப்பும் கெட்டுப்போகாது. தேவைப்பட்டால் உயிரின் இயக்கத்தை மறுபடியும் உடலுக்குள் நிகழச்செய்ய முடியும்
வைத்திய முப்பு, வாத முப்பு இரண்டும். சித்தர்களின் ரசவாதக் கருத்துக்கள். இவை பெரும்பாலும் வெளிப்படைதன்மையில் எழுதாமல் ”குழூஉக்” குறிகளாக எழுதப்பட்டுள்ளது. மிக உயர்ந்த கற்பமாகிய இதை ஏன் எல்லோராலும் அடையமுடிவதில்லை. அதற்கு சித்தர்களே காரணங்களை வரிசையாக சொல்கிறார்கள்
வாழ்வை நீடித்துக் கொள்ள முதலில் தெய்வ அருள் துணை செய்ய வேண்டும். ஊழ்வினை கர்மாக்கள் மிகுதியாக உள்ளவர்களுக்கு மறுக்கப்படுகிறது. அனுபவித்து தீர்க்க வேண்டிய சஞ்சித கர்மாக்களை எதோ ஒரு வழியிலாவது அனுபவித்து கழிக்க வேண்டும். மனிதன் அனுபவிக்கும்,நன்மை,தீமைகள் அவன் கர்மாவால் மட்டுமே அவனுக்கு வரும் நன்மையும்,தீமையும் பிறன் தர வரா..? என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அகத்தியர் கர்ம காண்டம் 300 என்ற நூலில் நோய்களுக்கும் மனிதக் செய்யும் செயல்களுக்கும் அடிப்படைத் தொடர்பு உண்டு என்று கூறுகிறது..
.
இவற்றையெல்லாம் கடந்து கற்பம் கிடைத்து அதை உண்ண வேண்டும் என்றால் இதுவரை பல்வேறு பிறவிகளில் வாங்கின கடனை திருப்பிச் செலுத்திவிட வேண்டும். அதாவது கர்மாக்களை ஒரே முறையில் முழுவதுமாக முடித்துக் கொள்ள வேண்டும். அது மரணத்திற்கு ஒப்பானது உடல் படிபடியாக கழிவாகவே மாறி கடுமையான வேதனையைத் தரும். தெளிந்த மனம்,திடசித்தம் இல்லாதவர்களால் இதை தாங்க இயலாது.
கடுமையான வயிற்றுப் போக்கு பல நாட்கள் தொடரும் அதில் உடல் அவயங்கள் உருகி கழிவது போல் இருக்கும். ஒரு கட்டத்தில் அது நின்றவுடன் வாயில் பல் முழுவதும் கொட்டிப் போகும். அதன் பிறகு ரோமங்கள், நகங்களும் விழுந்து, உடல் தோல் பூராவும் தீயில் கருகியது போல் உரியத் தொடங்கும். முடிவாக ஒவ்வொரு பாதித்த உறுப்புகளும் ஓரு குறிப்பிட்ட கால அளவிற்குள் புத்தாக்கம் செய்யப்பட்டு இளமை திரும்பியிருக்கும்.
எனவே கற்பம் கிடைத்தவர்கள் கூட அதன் ஊழ் வினை செயல்பாட்டுக்கு பயந்து அதை சாப்பிடுவதை தவிர்த்திருக்கிறார்கள். இதை அனுபவப்பூர்வமாக அறிந்தவர் 1954ல் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த திரு.பலராமையா justice என்பவர். அவர் சித்தர் அறிவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சித்த மருத்துவராகவும் இருந்திருக்கிறார்.கற்பத்தை சாப்பிட்டு தன் உடலில் நடக்கும் மாற்றங்களை சோதித்துப் பார்த்து எழுதியவர். நீண்ட நாள் வாழ்ந்தவர்.
நன்றி
அன்புடன்
சந்திர ஆதித்யன்.
0 கருத்துகள்