Hot Posts

6/recent/ticker-posts

திருமூலரின் கர்ப்ப வாகடம்

  திருமூலர்


3000 ஆண்டுகள் வாழ்தவர் என்று கூறப்பட்டாலும், நேரான சான்றுகள் எதுவுமில்லை. சேக்கிழார், திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் திருமூலரின் வரலாற்றை 28 விருத்தங்களில் ( பாடல்களில்) காட்டியுள்ளார். சேக்கழாரின் காலத்தில் கூட இவர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்ற கருத்தே நிலவியது.

திருமூலர் என்ற பெயரில் வரலாற்றில் பலர் சித்த மருத்துவ துறையில் இருந்துள்ளனர். திருமூலரின் இன்னொரு பெயர் நந்தி, நந்திகள் நான்கு பேர்கள்  அவர்கள் சிவயோக முனிவர், பதஞ்சலி, புலிக்கால் முனிவர், திருமூலர். இவரின் முதல் மாணவர் போகர் தவிர மேலும் ஏழு பேர்கள் இருந்துள்ளனர். மேலும் சோழ மன்னனுக்கு நடராஜர் சிலையை வடிவமைக்க உதவியதாக  கொங்கணர் தனது நூலான வாதகாவியம் 3000 த்தில் குறிப்பிடுகிறார்.

திருமூலர் எழுதிய பல நூல்களில்  '' கர்ப்ப வாகடத்தில்'' அவரின் பெயர் நந்தி என்றே வருகிறது. இந்நூல் அறிவியல் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது இதை படிக்கும் போது உணரமுடிகிறது. இந்த ஞானம் இன்றளவிலும்கூட அறிவியலால் கண்டறிய முடியவில்லை.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் பெண்களின் கருத்தரித்தலில் ஏற்படும் பல மாறுபாடுகளை தெளிவாக விளக்குகிறது.  நவீன ஸ்கேனர் உதவியிருந்தால் கூட இத்தகைய கண்டுபிடிப்புகளை அறிய முடியாது. 

பெண்ணின் கர்ப்பப் பையில் உடலுறவில் ஆணின் விந்து சென்ற தருணம். அது கர்பப் பையில் நிலை கொண்ட விநாடியில் தாய் இருந்த மனநிலை, அப்போது தாயின் உடலில் இருந்த கழிவுகளின் அளவு ( மலம், சிறுநீர் ) உடலுறவிற்கு முன் தாய் உண்ட உணவு , அது செறித்த நிலை ஆகியவற்றை வைத்து உருவான சிசுவின் தன்மையை திருமூலர் ஒவ்வொரு பாடல்களிலும் தெளிவாக விளக்கிச் செல்கிறார்.

பிரம்மிக்க வைக்கும் தமிழ் சித்தர்களின் ஞானத்தை அளக்க அளவுகோல் என்பது இல்லை. 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட அறிவு பெட்டகங்கள் இன்று அறிந்த கொள்ளவார் யாருமில்லாமல் மறைந்து கிடக்கறது.

இதற்கு காரணம் சில பாடல்கள், சிகிச்சை சம்பந்தமான மருந்துகள் பரிபாஷையில் குறிப்பிடப்பட்டதால் தெளிவாக அறியமுடியால் போய்விடுகிறது.

சித்த மருத்துவம், தொன்மையான திரவிட நாகரீகத்தை அடிப்படையாக உடையது.  எட்டு வகையான நாடியின் ஓட்டத்தை வைத்து ஒருவருடைய நோயறிதல், பஞ்சபூதங்களின் தன்மைகளை ( காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் )  குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்பட்ட மருந்துகள், தவிர மருந்துகளுடன் உடலை நீண்ட ஆயுளுடன் நீடித்து இருக்க 'காயகற்பங்கள்' தவிர உடல் வலுவடைய மூச்சுப் பயிற்சிகள்,  உடலும் மனமும் சேர்ந்து ஆரோக்யமாக இயங்க யோக பயிற்சிகள் போன்றவை திருமூலரின் திருமந்திர நூலான இதில் விளக்கப்படுகிறது.

தவறானவர்கள் இதை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தால்  பாடல்கள் பல இடங்களில் பரிபாஷை சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதை அப்படியே விட்டுவிடாமல் ஓரளவிற்காவது அறிவின் தீட்சன்யமுடையோர் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பரிபாஷை செற்களுக்கு அகராதிகள், தனி நிகண்டுகள், திறவுகோல் என்ற பெயரில் நூல்களையும் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

இந்நூலில் 'வாதம், பித்தம், கபம்' ஆகியவைகளையும் , நாடிகள், சரம் பற்றிய செய்திகள், வாத நோய் ,சூலை, சன்னி, என்ற முக்குற்ற நோய்களைப் பற்றியும் பேசுகிறது.

சில பாடல்களைப் பற்றி பார்ப்போம்.   

''தன்னுடைய தாரமான தையலை புணரும்போது

உன்னுடைய வல பாகம், ஓடியே வாயுவினூடே

அன்னது கர்ப்பமானால், ஆணும் சொரூபமாகும்

முன்னுள்ள அறிஞர், சொன்ன மூதுரை அறிந்து கொள்ளே.

பாடல்1,

ஒருவன் தனது மனைவியுடன் உடலுறவு ஈடுபடும்  போது மனைவியுடன் இன்பத்தை பெறும் நிலையில், அப்போது ஆணின் வலது நாசி துவாரத்தின் வழியே மூச்சு ஓடினால் அந்த கரு ஒரு ஆண். ''அறத்தால் வருவதே இன்பம்'' என்ற வள்ளுவர் வாக்கற்கு ஏற்ப,  இங்கே மனைவியுடன் என பாடலில் அழுத்தமாக குறிப்பிடப்படுகிறது

பாடல் 2.

கர்பத்தில் நின்ற காற்று கிழித்திடும் வித்துனூடே

தப்பற ஒதுங்குமாகில் தரித்திடும் குழவிஇரண்டாம்

ஒப்புற வலமடக்கல் உதித்திடும் செவிடது ஆகும்

அப்புற சலமடக்ம் பிள்ளையும் ஊமையாகும்.

 

சேர்க்கயின் போது ஆணின் விந்துவில் காற்று நடுவில் சென்றால் அது பிளவுபடும். இரண்டாவது பிரிந்த சூல்கள் கருப்பையில் சென்றால் அது இரட்டைகரு ஆகும். இரட்டை குழந்தைகளை ''கவை மகன்' என்று சங்க இலக்கயங்கள் கூறும்.  தாய் மலத்தை வெளியேற்றாமல் உடல்சேர்ந்தால் பிறப்பது செவிபுலன் இன்றியோ, அல்லது செவிபுலனில் பிற்காலத்தில் நோய் வாய்ப்பட்டு அவதியுரும். சிறுநீரை  வெளியேற்றாமல் இணைந்தால் பேச்சில் குறைபாடு, அல்லது ஊமை , அல்லது திக்கிப் பேசுதல் போன்ற குறையுடன் பிறக்கும்.


பாடல்3 


பாட்டிமையான நூலில் பாவையாள் தனைக்கூடி

நாட்டியே கர்ப்பத்துக்குள்ளே நலம் பிறவந்த பிள்ளை

கூட்டியே, அறையைவிட்டுப் குதித்திடும் அந்தநாளில்

வாட்டிய முசலகண்டன் வந்திடும் உண்மைதானே.


அமாவசைக்கு அடுத்த நாள் பாட்டிமை எனப்படும், இந்நாளில் பெண்ணுடன் சேர்ந்து ஏற்படும் குழந்தைக்கு ''முசலகண்டன்'' என்ற வலிப்பு வரும். என்பது நடைமுறையாகும். எனவே இந்நாளில் பெண் சேர்க்கயை தவிர்க்க வேண்டும்,

இங்கே அமாவாசை என்பது பரிபாஷையாகும், அமாவாகசை என்பது உண்மையில் நாளை குறிப்பிடுவதல்ல  இது பெண்களின் 'விலக்கான நாட்களைப் பற்றி குறிப்பிடுவது , பெண் உடலில் உற்பத்தியாகும் சுரோநிதத்தின் தரம் பற்றி குறிப்பிடுவது.

மாதந்தோறும் வரும் அமாவாசை, பௌர்ணமி என கொள்ளுவது தவறு.

தமிழ் தளிர்#

கருத்துரையிடுக

0 கருத்துகள்