Hot Posts

6/recent/ticker-posts

தெளிவான கனவு( Lucid Dreams.

  தெளிவான கனவு( Lucid Dreams.

நீங்கள் தூங்கும்போது நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், என்ன செய்வீர்கள்.? உங்கள் கற்பனைக்கு ஏற்ப கனவு, அது கதையை வடிவமைத்தால் அதுவும் நீங்கள் விரும்பிய காட்சியமைப்பில் ஒரு தெளிவான கனவு,  இது அற்பதமாக இருக்கும்தானே. 



அப்படி ஒரு சக்தி மனிதனுக்கு இருந்தால்..? பிறகென்ன கனவு காண்பதையே முழு நேர தொழிலாக மாற்றிக் கொண்டு விடுவார்கள். இது  வேடிக்கையானது மட்டுமல்ல, பல சாத்தியங்கள் இருக்கலாம்..! பல உளவியல் ஆய்வுகள் இது சம்பந்தமாக இன்று வரை மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். உண்மையில் நாம் விரும்பிய கனவை  காணத்தான் முடியுமா.? என கேட்டால் ..அதற்கு கனவு எப்படி! எங்கே? உருவாகிறது என்ற புரிதல் அவசியம்.

 நீங்கள் நிஜமாகவே கனவு காண்கிறீர்கள், அது உண்மையல்ல என்பதை எப்போதாவது ஒரு கனவின் நடுவில் உணர்ந்தீர்களா?  அப்படி உணர்ந்தால் அது 'தெளிவான கனவு' என்று அழைக்கப்படுகிறது, அது என்ன தெளிவான கனவு.?

Conciouse Lucid Dream

எளிமையாகச் சொன்னால், நீங்கள் தூங்கும்போது நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கனவுக் கதையை வடிவமைக்கும்போது, ​​அது ஒரு தெளிவான கனவு.  காற்றில் பறப்பது, கட்டிடத்திலிருந்து விடுபடுவதை அனுபவிப்பது மற்றும் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லாத விஷயங்களைச் செயல்படுத்துவது போன்ற சாத்தியமற்ற விஷயங்களைச் செய்ய முடியும் என்ற அர்த்தத்தில் அத்தகைய கனவுகள் தெளிவானதாகவும், உண்மையானதாகவும், மாயாஜாலமாகவும் உணர்கின்றன.  

உங்கள்  உறக்கம், திரைப்படத்தை இயக்குவது போன்று உங்கள் விருப்பப்படி கனவு காட்சிகளை கட்டமைத்து கொடுத்தால்  எப்படி இருக்கும். ஒரு  தெளிவான கனவு காண்பவர்கள் சிறந்த சிக்கலைத் தீர்ப்பவர்கள் என்று ஆய்வு கூறுகிறது

ஏறக்குறைய பாதி மக்கள் குறைந்தபட்சம் ஒரு தெளிவான கனவு கண்டிருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  2016 ஆம் ஆண்டில், டேவிட் சாண்டர்ஸ் மற்றும் சக பணியாளர்கள் 34 தெளிவான கனவுகள் பற்றிய ஆய்வுகள், 24,282 பேரில் 55% பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை தெளிவான கனவுகளை அனுபவித்ததாகக் காட்டுகிறது.  

நாம் ஏன் தெளிவான கனவுகளை எதிர்கொள்கிறோம் என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும்,  சில ஆய்வுகளின்படி தெளிவான கனவுகளைக் காணும் நபர், மற்றும்  அப்படி இல்லாத நபர்களின் மூளையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. 

 முடிவெடுப்பது மற்றும் நினைவுகளை நினைவுபடுத்துவது போன்ற உயர் மட்டப் பணிகளின் தளமான ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸ் எனப்படும் மூளையின் முன் பகுதி தெளிவான கனவு காண்பவர்களில் பெரியதாகக் காணப்படுகிறது.

குழந்தைகள் இயற்கையாகவே தெளிவான கனவுகள் அவ்வப்போது காண்கிறார்கள்.6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளைப் பற்றிய சமீபத்திய ஹார்வர்ட் ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக வழக்கமான தெளிவான கனவுகளைப் காண்கிறார்கள்.  

தெளிவான கனவுகளை  காண நாம் கற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம் சில ஒருமுகப்படுத்தப்பட்ட உளவியல் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் 'தெளிவான கனவு காணும் வாய்பப்பை அதிகப்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது, ஆனால் அதை எப்படி செய்வது என்று பொதுவான யுக்தி என்று ஒன்றும் கிடையாது.

தெளிவான கனவின் அலைவரிசை.

தெளிவான கனவு உங்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது தெளிவான கனவு உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும் என்று பலர் நினைக்கிறார்கள்.  மாறாக, நாம் தெளிந்தவுடன் மூளை காமா அலை மூளை நிலைக்கு நகரும்.  இது பொதுவாக 10,000 மணிநேரத்திற்கு மேல் தியானம் செய்தவர்களுடன் தொடர்புடைய மூளை நிலை.  

ஆனால் தெளிவான கனவு தியானத்தின் இயற்கையான நிலை என்பதால், மூளை தன்னிச்சையாக காமாவாக நகர்கிறது.  நீங்கள் ஒரு தெளிவான கனவில் இருந்து விழிக்கும்போது, ​​காமாவுடன் குளித்த மூளையுடன் நீங்கள் விழிப்பீர்கள், அது உங்கள் விழித்திருக்கும் நிலையில் அதிக ஆற்றலையும் அதிக நினைவாற்றலையும் கொடுக்கப் போகிறது.

இந்திய யோக கலை

இந்திய யோக கலையில் தெளிவான கனவு காண்பதற்கு தனியான யோகப் பயிற்சிகள் உள்ளன. கேட்பதற்கு உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். உண்மையில் விரும்பிய கனவுகளை உருவாக்கி அதில் நீங்கள் உலவவும் முடியும். உருவாக்கும் கனவு என்பதைவிட காலம் நமக்காக ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கனவுகளே அவை. 

கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களிளும் உங்களை பயணம் செய்ய அனுமதிக்கிறது. அதை மெய்நிகர் கால எந்திரம் என்றுகூட அழைக்கலாம்.

சரி நான் விரும்பும் 'தெளிவான கனவில்' பயணம் செய்ய விரும்புகிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என்றால், இந்திய பாரம்பரிய யோகிகள் சில யோக பயிற்சிகளை வழங்கிச் சென்றுள்ளார்கள். அதன் பெயர் தந்திர யோகம் (Tantric Meditation)

TANTRIC MEDITATION

இந்த தந்திர யோகம் - "TANTRIC MEDITATION” என்பது மிகவும் பழமையானது. 5000 வருடங்களுக்கு முற்பட்டது. யோகிகளும் ஞானிகளும் இதை மிக ரகசியமாக குரு சிஷ்யப் பரம்பரையாக காப்பாற்றி வந்தி ருக்கிறார்கள். இந்த வழிமுறைகள் தந்திரசாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. மிக சுலபமாக மிக உயர்ந்த யோக சித்தி அடைவது இந்த தந்திர யோகம் ஆகும். சிறப்பாக இது மிகவும் சக்திவாய்ந்த ஆறு செயல்முறைகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.


*முதல் செயல் முறை என்பது "மன உணர்சிகளை கட்டுப்படுத்துதல் அல்லது அதிலிருந்து விலகி இருத்தல் பின் சுவாசம் நடைபெறுவதை உணர்தல்."

*இரண்டாவது செயல் முறை என்பது சுவாச பயிற்சியின் மூலம் மூலாதார சக்கரத்தை  தூண்டுதல்,

* 3,4,5, யோக ஆசிரியர் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சி முறைளை உள்ளடக்கியது.

* "தெளிவான கனவு" என்பது இந்த ஆறாவது செயல்முறைக்குள் வருகிறது.


இந்த யோக பயிற்சியை பழக்கப் படுத்திக் கொண்டால் நினைத்தபோது ஆன்ம உடலை பௌதிக உடலிலிருந்து வெளியேற்றி எங்கு வேண்டுமானாலும் இவ்வுலகில் சுற்றி வரலாம். இந்த ஆன்ம உடலானது மன எண்ணத்தின் வேகத்தில் செயல்படுகிறது. வெகு தொலைவில் உள்ள ஒர் இடத்தை நினைத்ததும் அங்கு இருப்பீர்கள்.  இதுதான் மனோவேகம் என்பது. 


 இதுபோல இவ்வுலகில் எங்கும் உலாவிவரலாம். இது போல பயிற்சி பெற்று செயல்படுவது தவிர, மற்ற சாதாரண மக்களுக்கு தூக்கத்தில் இது எப்போதாவது நடைபெறுகிறது தூங்கும்போது காணும் கனவே ஆன்ம சரீரம் வெளியே வந்து செய்கிற செயல்தான். 


ஆனால் இந்த அனுபவத்தை எல்லோராலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. யோக நிலையில் பரகாயப் பிரவேசம் செய்து வெளியே உலாவும்போது பலவண்ண நிறங்களை காணலாம். கலர் சினிமா பார்ப்பதுபோல வண்ணங்கள் மிளிரும். தூக்கத்தில் காண்பது கறுப்பு வெள்ளைதான். இதுதான் யோகிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். யோக நிலையில் தெரிந்து எங்கு போகவேண்டுமானாலும் போய் வரலாம். ஆனால் சாதாரண மக்கள் தூக்கத்தில் மனம் செயல்பட்டு என்ன செய்கிறதோ அதைத்தான் உணர முடியும்.  அதுவும் கனவாக மறைந்துவிடும். இதுதான் இயற்கையின் தத்துவம்.










கருத்துரையிடுக

0 கருத்துகள்